திட்டமிட்டபடி, வருகிற 31 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசிப்படி புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் செய்வது என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.


இதனைத் தொடர்ந்து, சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நிதித்துறை அதிகாரிகள், வங்கி தலைமை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்த நிலையில் தற்போது திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.


இந்த வேலைநிறுத்த போராட்டம் வருகிற 31 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.