மீண்டும் வங்கி ஸ்டிரைக்..! இந்த இரண்டு நாட்களில் வங்கி மூடப்படலாம்....
மீண்டு சர்வதேச அளவிலான வங்கி ஸ்டிரைக்; இந்த இரண்டு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது....
மீண்டு சர்வதேச அளவிலான வங்கி ஸ்டிரைக்; இந்த இரண்டு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது....
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொதுத்துறை வங்கிகளான 'பாங்க் ஆப் பரோடா'வுடன் விஜயா வங்கி, தேனா வங்கிகளை இணைப்பதற்கான திட்டத்தை வெளியிட்டனர். இந்த திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவும், அனுமதி அளித்துள்ளது. SBI வங்கி இணைப்புக்கு பின், இரண்டாவதாக, இந்த மூன்று வங்கிகளும் இணைக்கப்பட உள்ளன.
மத்திய அரசின் இந்த முடிவால், வங்கிகளின் வராக் கடனை மீட்பதில் பிரச்னை ஏற்படும்; ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக்கூறி, வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வங்கிகள் இணைப்பை எதிர்த்து, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் மற்றும், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதை தொடர்ந்து, பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஒரு பிரிவினர் 10 மத்திய தொழிற்சங்கங்களால் வழங்கப்பட்ட தேசிய அளவிலான வேலைநிறுத்த அழைப்புக்கு ஆதரவாக வரும் 8 மற்றும் 9 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வஙகி ஊழியர்கள் சம்மேளம் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 8 முதல் 9 ம் தேதி வரையிலான இரண்டு நாள் தேசிய வேலைநிறுத்தத்தில் அகில இந்திய வங்கிகள் சங்கம் (AIBEA) இந்திய வங்கியின் ஊழியர் கூட்டமைப்பு (IBA) மற்றும் வங்கியின் ஊழியர் கூட்டமைப்பு IDBI ஆகியவற்றின் அறிக்கையை BSE வெளியிட்டுள்ளது.
2019 ஜனவரி 8-9 ஆம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும், ALBEA மற்றும் BEFI ஆகியவற்றின் போது, வங்கியின் கிளைகள் / அலுவலகங்கள் சில மண்டலங்களில் செயல்படலாம்.
இதனால் இரண்டு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட மக்கள் விரோத கொள்கைகளைக் கைவிட வலியுறுத்துவதுடன் 12 அம்ச கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 26 ம் தேதி நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் சுமார் 11 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!