நாளை (ஆகஸ்ட் 22) நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த போவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் கடந்த 19-ம் தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் திட்டமிட்டப்படி நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. 


இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கூறுகையில்:-


தேசிய வங்கி துறைகளுக்கு எதிராக சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு அதை தனியார் மயமாக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக பலமுறை குரல் கொடுத்தும் இதுவரை அரசுடன் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அதனால் இந்த நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நாட்டில் உள்ள ஒன்பது முக்கிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கள் ஒன்று கூடி நாளை அகில இந்திய அளவில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது". என்று தெரிவித்தார். 


9 வங்கி யூனியன்கள் (AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, INBOC, NOBW, NOBO) இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.