வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில்மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இப்பணியினை விரைவில் நடைமுறைப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. 


இந்நிலையில் பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் விதமாக ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.


அந்த அறிவிப்பில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்றும், சனி மற்றும் ஞாயிறு வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.