கணக்கு வைத்துள்ள வங்கியில் மட்டுமே ரூபாய் நோட்டு மாற்ற முடியும்
பழைய ரூபாய் நோட்டுகளை இன்று வங்கிகளில் மாற்ற முடியாது என்று இந்திய வங்கிகள் அசோசியேஷன் தலைவர் ராஜீவ் ரிஷி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: பழைய ரூபாய் நோட்டுகளை இன்று வங்கிகளில் மாற்ற முடியாது என்று இந்திய வங்கிகள் அசோசியேஷன் தலைவர் ராஜீவ் ரிஷி தெரிவித்துள்ளார்.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகளும், போஸ்ட் ஆபிஸ்களும் மக்களிடம் உள்ள பணத்தை மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கறுப்பு பணத்தை மாற்றாமல் இருக்கவும் நிதியமைச்சகம் பண மாற்றத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இன்று வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் பழைய செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மாற்றி அளிக்கப்படும் என்று இந்திய வங்கிகள் நிர்வாகம் அறிவித்துள்ளது. கணக்கு வைத்துள்ள வங்கியில் மட்டுமே இன்று ரூபாய் நோட்டு மாற்ற முடியும் என்று இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்திய வங்கிகள் அசோசியேஷன் தலைவர் ராஜீவ் ரிஷி கூறியுள்ள செய்தியில், ''பழைய ரூ.500,1000 ரூபாய் நோட்டுகளை இன்று வங்கிகளில் மாற்ற முடியாது. மூத்த குடிமக்கள் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம், மற்றபடி வங்கிகள் வழக்கம்போல் இன்று திறந்து இருக்கும் என்றார்.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு ஒரே ஒரு முறை ரூ.2,000 மட்டுமே அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கியில் பழைய நோட்டுக்கு ரூ.4500லிருந்து ரூ. 2 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும் என்று மத்திய அதிகாரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.