உத்தரப்பிரதேசத்தில் 14 பேர் பலியானதற்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலை பலர் செய்து வருகின்றனர். இதை அங்குள்ள மக்கள் சிலர் வாங்கி குடித்தனர். குடித்த சில நிமிடங்களில் அவர்கள் ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.


அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ராம்நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர். 


இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.


மேலும், 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான சாராய வியாபாரி பப்பு ஜெய்ஸ்வால் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.