தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இனி இந்த அடிப்படை வசதிகள் கிடையாது!
குறைந்தபட்சமாக ஒரு டோஸ் தடுப்பூசியையாவது மக்கள் போட்டிருக்க வேண்டும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொடுக்க வேண்டும் என அதிரடியாக கலெக்டர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா : கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகத்தையுமே ஸ்தம்பிக்க செய்தது.இந்த பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல உலக நாடுகளும் ஒவ்வொரு முயற்சியை மேற்கொண்டு வந்த நிலையில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனையடுத்து ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டினாலும், அரசின் போதுமான விழிப்புணர்வு நடவடிக்கையினால் மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள தொடங்கினர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 74 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.
ALSO READ சென்னையில் எப்போது நிற்கும் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்நிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி போட்டவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த 36 மாவட்டங்களில், அவுரங்காபாத் மாவட்டம் 26-வது இடத்தை பெற்று பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. அதோடு இந்த மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 55 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த நிலைமையை தவிர்க்கும் பொருட்டு அவுரங்காபாத் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு அம்மாவட்ட கலெக்டர் சுனில் சவான் உத்தரவு ஒன்றினை அதிரடியாக பிறப்பித்து இருக்கிறார். அந்த உத்தரவின்படி, அவுரங்காபாத் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகள், சமையல் கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி சான்றிதழ்கள் சரிபார்க்கப்படல் வேண்டும்.
அதையடுத்து குறைந்தபட்சமாக ஒரு டோஸ் தடுப்பூசியையாவது மக்கள் போட்டிருக்க வேண்டும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொடுக்க வேண்டும் என அதிரடியாக கலெக்டர் கூறியுள்ளார். மேலும் கலெக்டர் விதித்திருக்கும் இந்த உத்தரவை யார் ஒருவர் பின்பற்றவில்லையே அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அம்மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ALSO READ இன்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கு நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR