BBC IT Raid: பிரபல பிபிசி ஊடகத்தின் டெல்லி, மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று வருமான வரி ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். பிபிசி நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் மற்றும் அதன் இந்தியப் பிரிவு தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளஅ ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமான வரித்துறை அதிகாரிகள் பிபிசியின் நிதித்துறையின் கணக்கில் உள்ள சில ஆவணங்களை சரிபார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிபிசி நிறுவனத்தின் கணக்கு மற்றும் நிதித்துறை ஊழியர்களின் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் மின்னணு சாதனங்களின் காப்புப்பிரதியை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைப்பார்கள்.


பிபிசி நிறுவனத்தின் வணிக வளாகத்தில் மட்டுமே வருமான வரித்துறை ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளம்பரதாரர்கள் அல்லது இயக்குநர்களின் குடியிருப்புகள் மற்றும் பிற இடங்களில் ஆய்வு மேற்கொள்ளவில்லை.



மேலும் படிக்க | புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: உன்னத தியாகம் செய்து வீர மரணம் அடைந்த வீரர்கள்


முன்னதாக, பிரதமர் மோடி குறித்து பிபிசி நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட ஆவணப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், வருமான வரித்துறையின் தற்போதைய ஆய்வு அரசியல் தளத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். 


பிபிசி நிறுவனத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை என்பது 'அறிவிக்கப்படாத அவசரநிலை' என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மேலும், வருமான வரித்துறையின் சோதனை குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா ட்விட்டரில்,"பிபிசி டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக தகவல். ஓ... அப்படியா... எதிர்பார்க்கவேயில்லை" என பகடி செய்யும் வகையில் குறிப்பிட்டிருந்தார். 



கடந்த மாதம், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் இணைப்புகளைப் பகிரும் பல யூடியூப் வீடியோக்கள் மற்றும் ட்விட்டர் இடுகைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 3ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம், ஆவணப்படத்தைத் தடுக்கும் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட தனித்தனி மனுக்களுக்கு மத்திய அரசு மற்றும் பிறரிடமிருந்து பதில்களைக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 'ஐய்யோ...' பிரபலத்தை பார்த்ததும் கூறிய பிரதமர் - ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ