புதுடெல்லி: நவராத்திரி விழா இன்று முதல் தொடங்கும் நிலையில், பண்டிகை காலங்களில் அடுத்த மூன்று மாதங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய தலைநகரில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லவ் அகர்வால், "அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், அவர் விழாக்களில் கவனமாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அன்புக்குரியவர்களைச் சந்திக்கும் போது கோவிட்-பொருத்தமான நடத்தை பின்பற்றப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். "துர்கா பூஜை (Durga Puja) மற்றும் ராம் லீலா, நவராத்திரி விழாக்களில் ஆன்லைனில் கலந்து கொள்ளுங்கள். தீபாவளியன்று உங்கள் அன்புக்குரியவர்களை ஆன்லைனில் சந்தியுங்கள்," என்று அவர் கூறினார்.



"முகக்கவசங்கள் (Facemask)  மிகவும் முக்கியமானவையாகும். தடுப்பூசி ஒரு கவசம். பண்டிகை மற்றும் திருமண காலங்கள் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன." என்று அவர் மேலும் தெரிவித்தார்.


ALSO READ: அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பீதியில் பெற்றோர்


“இந்தியா, கொரோனா வைரஸ் தொற்றுநோயை நன்றாக சமாளித்தது. இப்போது தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்னும் சவால் மீதமுள்ளது. அனைவரும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்” என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.


"கோவிட் சவால் இன்னும் முடிவடையவில்லை. ஓரளவிற்கு, நாம் கோவிட்டின் (COVID) இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியுள்ளோம். நாம் தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும்," என்று லவ் அகர்வால் கூறினார்.


நாட்டில் சிகிச்சையில் உள்ள 2.44 லட்சம் நோயாளிகளில், 28 மாவட்டங்களில் நேர்மறை விகிதம் 5% முதல் 10% வரை உள்ளது.


"அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமில் சில மாவட்டங்கள் உட்பட 28 மாவட்டங்களில் 5% - 10% நேர்மறை விகிதம் உள்ளது. 34 மாவட்டங்களில் வாராந்திர நேர்மறை விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார்.


லட்சத்தீவு, சண்டிகர், கோவா, இமாச்சலப் பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் 100% மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.


ALSO READ: COVID-19 3rd Wave: பண்டிகை காலங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை: மத்திய அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR