புதுடெல்லி: சுதந்திர நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில் நடைபெற்ற  Beating retreat நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் 74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அத்தாரி-வாகா எல்லையில் இன்று Beating retreat நிகழ்ச்சி நடைபெற்றது. நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,  நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.  



Beating retreat என்பது இரு நாட்டின் கொடிகளையும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக இரு நாட்டின் தேசியக் கொடிகளையும் கம்பங்களில் இருந்து கீழே இறக்கும் நிகழ்வாகும்.
தமிழில் இதனை,  'கொடிகள் இறக்கும்  சடங்கு’அல்லது பின்வாங்கு முரசறை சடங்கு என்று சொல்லலாம். 1959ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையும் பாகிஸ்தானின் பாகிச்தான் ரேஞ்சர்சும் இணைந்து நிகழ்த்தும் செயல்முறையாகும்.



முன்னதாக, நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் இறையாண்மையை எந்த நாடும் சீண்டிப் பார்க்க முயற்சிக்கக் கூடாது என்றும் கூறினார்.



இந்தியக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி) முதல் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LAC) சீண்டல்களுக்கு தக்க பதிலளித்துள்ளதாக இந்தியப் படையினரைப் பாராட்டிய பிரதமர், சரியான நேரத்தில் திறமை மற்றும் வீரத்தை இந்திய ராணுவம் மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் கூறினார்.


Read Also | சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ரயில் நிலையங்கள்!!