வடகிழக்கு மாநிலங்களில் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.


இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அசாமில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் இந்திய ராணுவம் இதனை மறுத்து, இது குறித்து இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்,


 



 


சமூக வலைதளங்களில் இந்திய ராணுவம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவிடப்பட்டுள்ளது.