எச்சரிக்கை! மார்ஃபிங் மூலம் மிரட்டி செலுத்திய கடனை வசூலிக்கும் கொள்ளை கும்பல்
கடனை செலுத்திய பிறகும், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பணம் வசூலிக்கும் கொள்ளை கும்பலின் அட்டூழியம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
கடன் கொடுப்பவர்களால் கடன் வாங்குபவர்களுக்கு ஏற்படும் தொல்லை புதிதல்ல. ஆனால் தற்போது கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் புதிய தொழிலை தொடங்கியுள்ளன. கடனை அடைத்தாலும் அவர்களிடம் மீண்டும் பணத்தை வசூலிக்க டெக்னாலஜி மூலம் புதிய வழியை கண்டுபிடித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மார்ஃபிங் முறை மூலம் கொள்ளை கும்பல் அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றன.
இந்த கொள்ளை முறை மெதுவாக நாடு முழுவதும் அதிகரித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவில் இந்த வலையில் விழுந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர், மும்பை மலாட்டைச் சேர்ந்த சந்தீப் கோர்கோன்கர். இவருக்கு கடன் கொடுக்க தயாராக இருப்பதாக கூறி பல நாட்களாக தொலைபேசி அழைப்புகள் வந்துள்ள. அவரும் தேவையைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் பணம் கடனாக வாங்கியுள்ளார். ஒரு வாரத்தில், வட்டியுடன் தொகையை திருப்பி செலுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மி - பாஜக இடையே வெடிக்கும் மோதல்!
ஆனால் அவருக்கு மீண்டும் வந்த அழைப்பில் கடன் செலுத்தப்படவில்லை, மேலும் பணம் டெபாசிட் செய்யுமாறு கூறியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தீப் பணத்தை திருப்பி செலுத்திவிட்டதாக கூறியுள்ளார். அவரின் இந்த பதிலுக்கு மறுப்பு தெரிவித்த கொள்ளை கும்பல் மிரட்டலை தொடங்கியுள்ளது. சொல்லும் பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால் நிர்வாண புகைப்படங்கள் வைரலாகும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதை சந்தீப் அலட்சியப்படுத்தியதால், அவரது நிர்வாண புகைப்படங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டன.
இதனால், அவமானம் தாங்க முடியாத சந்தீப், தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்களுக்கு மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட செயலி மூலம் கடன் பெற்றவர்களில் ஏற்கனவே 5 பேர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, கடன் செயலிகளின் பின்னணியில் இருக்கும் ஆபத்துகள் குறித்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | பாலியல் வன்புணர்வு செய்த அப்பாவின் முகத்தை வீடியோ மூலம் தோலுரித்த மகள்
கடன் செயலிகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள காவல்துறையினர், அவர்களின் வலையில் விழுவது தனிநபர் தகவல்களுக்கும் ஆபத்து என கூறியுள்ளனர். முதலில் கவர்ச்சி காட்டி பின்னர் மிரட்டத் தொடங்குவார்கள் எனவும் எச்சரித்துள்ளனர். செயலிகள் மூலம் கடன் வழக்கும் மாபியா கும்பல், புதிய அவதாரம் மூலம் வாடிக்கையாளர்களை மிரட்டி வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR