புதுடெல்லி: மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாயிகள் (Farmers) போராட்டத்தின் 10 மாத காலத்தை குறிக்கும் வகையில், செப்டம்பர் 27 செவ்வாய்க்கிழமை, பாரத் பந்த் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிங்கு எல்லையில் நடந்த இரண்டு நாள் தேசிய மாநாட்டைத் தொடர்ந்து, எஸ்.கே.எம் 'பாரத் பந்த்'-க்கு அழைப்பு விடுத்தது.


காங்கிரஸ் (Congress), ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பந்த் ஆதரவு அளித்துள்ள நிலையில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகளின் போராட்டத்திற்கு (Farmers Protest) பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் ஆதரவை பாரதிய கிசான் யூனியன் வரவேற்றுள்ளது, ஆனால் தங்களின் நிலைப்பாடு எந்த அரசியல் கட்சியுடனும் பகிரப்படாது என்று வலியுறுத்தியுள்ளது.


செப்டம்பர் 24 செவ்வாய்க்கிழமை எஸ்.கே.எம்-இன் பாரத் பந்த் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அம்சங்கள் இதோ:


பந்த் நேரம்:


பந்த் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும்.


இருப்பினும், மருத்துவமனைகள், மருத்துவக் கடைகள், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் தனிப்பட்ட அவசரநிலைகளில் கலந்து கொள்ளும் நபர்கள் உள்ளிட்ட அனைத்து அவசரகால நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். தன்னார்வ மற்றும் அமைதியான முறையில் பந்த் அமல்படுத்தப்படும் என்று எஸ்.கே.எம் உறுதியளித்துள்ளது.


ALSO READ: PM கிசான்: விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி, ₹6,000க்கு பதிலாக, ₹36,000 பெறலாம்..!!


வங்கி அதிகாரிகள் சங்கம் 'பாரத் பந்த்'-க்கு ஆதரவு


அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AlBOC) திங்களன்று பந்த் நடத்த ஆதரவு அளித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், மோதலின் மையத்தில் உள்ள மூன்று சட்டங்களை ரத்து செய்யவும் அரசுக்கு இது கோரிக்கை விடுத்துள்ளது.


முன்னாள் பீகார் துணை முதல்வரும், ஆர்ஜேடியின் தலைவருமான தேஜஸ்வி யாதவும் செப்டம்பர் 27 அன்று பாரத் பந்த் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார். “NDA அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிர்ப்பு. நாங்கள் விவசாயிகளுடன் உறுதியாக இருக்கிறோம்.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


ALSO READ: BJPக்கு எதிராக போராடும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்! ஹரியானா துணை ஆட்சியர் அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR