எஸ்.சி.எஸ்.டி சட்டம்: வடமாநிலங்களில் வெடித்த போராட்டம்!! பாரத் பந்த்!!
எஸ்.சி மற்றும் எஸ்.டி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ததற்கு எதிராக மத்திய பிரதேசம்,, உத்தர பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எஸ்.சி மற்றும் எஸ்.டி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ததற்கு எதிராக மத்திய பிரதேசம்,, உத்தர பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.சி,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எஸ்.சி.எஸ்.டி. சட்டத்தின் கடுமையான பிரிவை நீக்கி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தலித் அமைப்புகள் நாடு தழுவிய போரட்டம் நடத்தினர். பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இதனையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது மத்திய அரசு.
ஆனால் எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மீண்டும் சட்டமசோதாவில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்து உள்ளன.
வட மாநிலங்களில் குறிப்பாக மத்திய பிரதேசம்,, உத்தர பிரதேசம், பீகார் போராட்டம் வெடித்துள்ளது. ரயில்கள் மறியல் செய்யப்பட்டன. பல மாவட்டங்களில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
வன்முறை ஏற்படாமல் இருக்க பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் முப்பத்தி நான்கு நிறுவனங்கள் மற்றும் 5000 பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.