இந்தியாவில் பாரத பயோடெக் நிறுவனம் (Bharat Biotech) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR -Indian Council of Medical Research)  தயாரித்த COVAXIN தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CDSCO-வின் பொருள் நிபுணர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின் ஆகும். பொது நலனை கருத்தில் கொண்டு நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


முன்னதாக, இந்தியாவில் கோவிஷீல்ட் (Covishield) COVID-19 தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்தது. நேற்று இதற்கான பரிந்துரையை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரைத்திருந்தது.


ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி 'கோவிஷீல்ட்' அவசரகால பயன்பாட்டிற்கு, இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Drug Controller General of India) 10 பேர் கொண்ட நிபுணர் குழு வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) ஒப்புதல் அளித்தது.


ALSO READ | Covishield: இந்தியாவில் அவசரகால மருந்தாக பயன்படுத்த DCGI ஒப்புதல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR