முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் மற்றும் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றைய தினம் தனது குடியரசு தின உரையினை நிகழ்த்திய போது இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார். 


பாரத் ரத்னா விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இவர்களில் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த முறை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பலமுறை மத்திய அமைச்சராக இருந்தவர். மற்ற இருவரும் தம் மறைவிற்கு பின் பாரத் ரத்னா விருதினை பெற உள்ளனர். 


இதில் ஒருவரான நானாஜி தேஷ்முக் ஒரு சிறந்த சமூக சேகவர். பாஜகவின் பழைய அரசியல் கட்சியான பாரதிய ஜன சங்கின் தலைவரான நானாஜி தேஷ்முக், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த பிப்ரவரி 27, 2010-ல் இவர் விண்ணுலகம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மூன்றாவது நபரான அசாமை சேர்ந்த பூபன் ஹசாரிகாவிற்கு வழங்கப்படுகிறது. கடந்த நவம்பர் 5, 2011-ல் மறைந்த ஹசாரிகா புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆவார்.


முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தலைவர்கள் வாழ்த்து...


பாரத ரத்னா விருது பெறும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 



இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... ‘நம் காலத்திய சிறந்த அரசியல் மேதையாக திகழ்ந்தவர். நாட்டின் முன்னேற்றப் பாதையில் தனது முத்திரையை உறுதியாகப் பதித்தவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.