Uttar Pradesh Lok Sabha Election 2024: நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான முழக்கம் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. ஒருபுறம், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக மூன்றாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கும் நிலையில், மறுபுறம் சமாஜ்வாடி கட்சி 6 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உ.பி. பிலிபிட் தொகுதி எம்.பி., வருண் காந்தி


இந்த ஆறு இடங்களில் சம்பல், பாக்பத், கவுதம் புத்த நகர், பிலிபிட், கோசி மற்றும் மிர்சாபூர் ஆகிய மக்களவைத் தொகுதிகள் அடங்கும். இதில் பிலிபிட் தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2019 மக்களவைத் தேர்தலில் இந்த பிலிபித் தொகுதியில் தான் பாஜக சார்பாக வருண் காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.


பாஜக சார்பாக சீட் கிடைப்பதில் சிக்கல்?


இந்தமுறை வருண் காந்திக்கு பாஜக சார்பாக சீட் வழங்கப்படாது என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க - ஜனநாயக படுகொலை செய்யும் பாஜக! அரிய செய்தியாளர் சந்திப்பில் சோனியா காந்தி குற்றச்சாட்டு!


கடந்த சில மாதமாக வருண் காந்தி பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார். இதற்கிடையில், அவர் காங்கிரசில் சேரலாம் அல்லது சமாஜ்வாடி கட்சி சேரலாம் என்ற யூகங்கள் வெளியாகின. 


பிலிபிட் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்த சமாஜ்வாடி கட்சி


ஆனால் வருண் காந்திக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் பிலிபிட் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிலிபிட் தொகுதியில் பகவத் சரண் கங்வாருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. 


இந்த நிலையில், பிலிபிட்டை சேர்ந்த பாஜக எம்பி வருண் காந்திக்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. வருண் காந்தி குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 


மேலும் படிக்க - தேர்தல் பத்திரங்கள் குறித்து ராகுல் காந்தியின் விமர்சனத்தால் கோபமடைந்த அமித் ஷா.. பதிலடி


வருண் காந்தி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவாரா?


இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாஜக தரப்பில் இருந்து வருண் காந்திக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், அடுத்தக்கட்டமாக ​​வருண் காந்தி என்ன முடிவு எடுப்பார்? என எதிர்ப் பார்க்கபடுகிறது


இதுபோன்ற சூழ்நிலையில் வருண் காந்தி சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வருண் பிரதிநிதி உட்பட மொத்தம் நான்கு பேருக்கான வேட்புமனு படிவங்களும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சமாஜ்வாடி கட்சியில் அவருக்கு கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன. 


வருண் காந்தி குறித்து அகிலேஷ் யாதவ் சொன்னது..


வருண் காந்தி தொடர்பான கேள்விக்கு, அவர் தொடர்பாக எங்கள் கட்சி முடிவெடுக்கும் என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். ஆனால், தற்போது பிலிபிட்டில் வேட்பாளரை அறிவித்து அக்கட்சி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


2019 லோக்சபா தேர்தலில், வருண் காந்தி பிலிபிட்டில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். இந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் வருண் காந்தி எந்த தொகுதியில் எந்த கட்சியில் போட்டியிடுகிறார் என்பது சுவாரஸ்யமாக உள்ளது.


மேலும் படிக்க - 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்... நாடு முழுவதும் உரிமைத்தொகை - திமுக தேர்தல் அறிக்கை


பாஜகவும் வருண் காந்திக்கும் என்ன பிரச்சனை? 


பாஜக எம்.பி, வருண் காந்தி தனது கட்சிக்கு எதிராக வெளிப்படையாக களமிறங்கினார். உ.பி., சட்டசபை தேர்தலுக்கு முன், வருண் காந்தி, மத்திய அரசையும், உ.பி., அரசையும் கடுமையாக தாக்கினார். கட்சியின் பெரும்பாலான முடிவுகள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், திறந்த மேடையில் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். 


ஒரு காலத்தில் பாஜகவின் தேசியத் தலைவராக ராஜ்நாத் சிங் இருந்தபோது, ​​கட்சியில் பல பதவிகளில் வருண் காந்திக்கு இடம் கொடுக்கப்பட்டது. அப்போது பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த வருண் காந்தி, மேற்கு வங்கத்தில் பாஜகவின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். 


ஆனால் 2014க்குப் பிறகு கட்சியில் அவரது அந்தஸ்து குறையத் தொடங்கியது. பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.


மேலும் படிக்க - வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்ப்பது? முழு விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ