பொருளாதார சந்தையில் தங்கள் மதிப்பினை அதிகப்படுத்திக்கொள்ள Google's Tez, Flipkart’s PhonePe செயலிகள் BHIM செயலிமூலம் பணபரிவர்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு CashBack சலுகைகளை வழங்கவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் தினம் அனுசரிக்கப்படுவரை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகள் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.


இந்த சலுகை மூலம் வாடிக்கையாளர்களுக்கு சுமார் ரூ.750 வரையிலும், விற்பனையாளர்களுக்கு ரூ.1000 வரையிலும் லாபம் கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Bharat Interface for Money (BHIM) ஆனது கடந்த டிசம்பர் 30, 2016 அன்று வெளியான மொபைல் செயலி ஆகும். இந்த செயலியினை கொண்டு மொபைல் எண்களுக்கு எளிதில் பணம் பறிமாற்றம் செய்ய இயலும். NPCI அறிக்கையின்படி கடந்த ஏப்ரல் 2017, பிப்ரவரி 2018 கால இடைவெளியில் மட்டும் சுமார் 85,659 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் இந்த செயலி மூலம் பறிமாறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


முன்னதாக, அம்பேத்கர் ஜெயந்தி நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அசம்பாவிதச் சம்பவங்கள் தவிர்க்கும் விதமாக அனைத்து இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கையை விடுத்துள்ளது.


சமீப காலமாக நாடெங்கிலும் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை அம்பேத்கார் ஜெயந்தி வருவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படலாம் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கையை விடுத்துள்ளது.