பீமா கோரேகாவ் சம்பவம் அடுத்து மஹாராஷ்டிராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், டெல்லியில் உள்ள மஹாராஷ்டிரா சதன் முன்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


பீமா கோரேகாவ் சம்பவம் அடுத்து மஹாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு தலித் சமூக மக்கள் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் தானே மாவட்டத்தில் ஜனவரி 4-ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


 



 


பீமா கோரேகாவ் மோதல்: மும்பைக்கு பரவிய வன்முறை!!



 


கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1818-ம் ஆண்டு நடந்த போரின் நினைவாக கோரேகாவ் பீமா பகுதியில் தலித் மக்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது, அங்கு வந்த மற்றொரு தரப்பினருக்கும் தலித் சமூகத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இது பயங்கர மோதலாக ஏற்பட்டது. இந்த மோதலின் போது ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார். இதனால் கலவரம் பல பகுதிகளுக்கு பரவியது.


 



 


நேற்று நடைபெற்ற கலவரத்தில் போலீஸ் வாகனம் உட்பட ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் போராட்டம் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பல பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.


மஹாராஷ்டிராவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு


இந்நிலையில், புனே கலவரத்தை கண்டித்து மஹாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு தலித் சமூக மக்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று மகாராஷ்டிரா முழுவதும் முழு கடையடைப்பு நடந்து வருகிறது. பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பணிக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த முழு அடைப்பை தொடர்ந்து மராட்டிய மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


 



 


பல இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடகா மற்றும் மும்பை இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு எக்ஸ்பிரஸ்வே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. அசாப்பா மற்றும் காட்கோபர் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இதையடுத்து ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


 



 


எல்ஃபின்ஸ்டோன் ரோடு, கோரேகான், தாதர், மாலாட்டில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிரா தானே மாவட்டத்தில் ஜனவரி 4-ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.