நடந்து முடிந்த சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் இம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பூபேஷ் பாகெல், டி.எஸ் சிங் டியோ, தம்ரவாஜ் சாஹு, சந்திரன் தாஸ் மஹன்த் ஆகியோருக்கு இடையே முதல்வர் போட்டி நிலவி வந்த நிலையில், இறுதியாக சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்ராக பூபேஷ் பாகெல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்று அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சத்தீஸ்கர் பொறுப்பு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார்.


 



சத்தீஸ்கரில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக, புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் மாற்றம் செய்யப்பட்டது. முதலில் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. மழையின் காரணமாக பல்பீர் ஜுனேசா இன்டூர் ஸ்டேடியத்தின் முதலமைச்சராக பதவிஏற்ப்பு விழா நடைபெற்று என அதிகாரி தெரிவித்தார்.


இன்று ஒரு நாளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.