விசிட் அடித்த பிரதமர்... ரெடியான தென்னிந்திய வேட்பாளர் லிஸ்ட் - இன்று வெளியீடு?
BJP Candidate List: நாடு முழுவதும் உள்ள 130 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று மாலை வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
BJP Candidate List: நாடு முழுவதும் கிரிக்கெட் சீசன் வரும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடருக்கு ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம்தான். ஆனால், இந்தாண்டு கிரிக்கெட் திருவிழாவோடு, உலகின் பெரிய ஜனநாயகான நாடான இந்தியாவின் மக்களவை பொதுத்தேர்தலும் நடைபெற உள்ளது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
அந்த வகையில், தேர்தல் தேதியும் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் வந்த தகவலின்படி, மார்ச் 8ஆம் தேதி அன்று மக்களவை பொதுத்தேர்தல் தேதி மற்றும் முழு அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. இறுப்பினும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை. தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கட்சிகள் தங்களின் பரப்புரை பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக அறியப்படும் INDIA அதன் தொகுதி பங்கீட்டு பணிகள் மும்முரமாக உள்ளன. மாநிலம் முழுவதும் சுமுகமாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. IUML, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டும் தற்போது தலா 1 சீட் உறுதியாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தேர்தல் என்று வந்துவிட்டால், தேசியளவில் பாஜக சூறாவளியாக பணியாற்றும் எனலாம். வெற்றி, தோல்வி ஒருபுறம் என்றாலும் பாஜகவின் தேர்தல் வியூகங்களும், தேர்தல் பணிகளும் எதிர்க்கட்சிகளை சற்று தடுமாற வைக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. அனைவருக்கும் முன் கூட்டணியை உறுதிசெய்து வேட்பாளர்களை அறிவிக்கும் அளவிற்கு பாஜக தீயாக வேலை செய்யும் என்பார்கள்.
இந்நிலையில், டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் கூழு கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தல் குறித்து நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமை வகிப்பார் என தெரிகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து, மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இதுவரை பாஜக வெற்றியே பெறாத 130 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் பெரும்பாலும் தென்னிந்திய தொகுதிகள்தான் இடம்பெறும் என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றிடெல்லியின் 7 மக்களவை தொகுதிகளுக்கு தகுதிவாய்ந்த 25-30 வேட்பாளர்களை தேர்தல் குழு, பாஜகவின் தலைமைக்கு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த பட்டியலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவாகரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மறைந்த முன்னாள் பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் மகளான பன்சூரி ஸ்வராஜ் மற்றும் தற்போதைய எம்.பி., மீனாட்சி லேகி ஆகியோரும் அடக்கம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஜார்கண்டில் பயங்கர ரயில் விபத்து... தண்டவாலத்தில் சென்றவர்கள் மீது மோதிய ரயில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ