ஜாம்தாரா ரயில் விபத்து: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கலிஜாரியாஹால்ட் என்ற பகுதியில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலர் பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலாஜாரியா ரயில்வே கிராசிங் அருகே, ரயில் நிறுத்தப்பட்டபோது சில பயணிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கியதாகவும், அப்போது மற்றொரு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரயில்வே போலீசார் மற்றும் மாவட்ட காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான முழு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தகவலளித்துள்ளனர்.
#WATCH | Jamtara, Jharkhand: On Jamtara train accident, Jamtara SDM Anant Kumar says, "Near the Kalajharia railway crossing, the train stopped and some passengers got off and were run over by another local train. Information was received that some people have died. RPF and the… pic.twitter.com/h7moXjB2pW
— ANI (@ANI) February 28, 2024
முதற்கட்ட தகவல்களின்படி, ஜம்தாரா-கர்மடண்டில் உள்ள கல்ஜாரியா நகருக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. ரயில் பாதையில் பயணிகளின் சாமான்கள், காலணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக அங்கிருந்த மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. ரயில்வே நிர்வாகம், ரயில்வே போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது.
இந்த விபத்து எப்படி நடந்தது?
ஆங் எக்ஸ்பிரஸ், தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததால் திடீரென நிறுத்தப்பட்டது. தீ பற்றி கேள்விப்பட்டதும், பயணிகள் ரயிலில் இருந்து குதித்தனர். அவர்கள் தண்டவாளத்தில் குதித்து நடக்கத் தொடங்கியபோது, அடுத்த தண்டவாளத்தில் வந்த ஜாஜா-அசன்சோல் ரயில் அவர்கள் மீது மோதியதாக கூறப்படுகின்றது. கலாஜாரியா ரயில் நிலையத்தில் பயணிகள் மீது ரயில் மோதி இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மருத்துவ குழுவினரும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன.
இறந்தவர்கள் பயணிகள் அல்ல: ரயில்வே நிர்வாகம்
தீ விபத்து குறித்த தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. ரயில் எண் 12254 இலிருந்து குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்த இருவர் மீது ரயில் மோதியதாக கிழக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ கௌசிக் மித்ரா கூறினார். தீ விபத்து பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 'தற்போது இரண்டு இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்கள் பயணிகள் அல்ல, தண்டவாளத்தில் நடந்து சென்றவர்கள். இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட ஜேஏசி குழு அமைக்கப்பட்டது.' என்று அவர் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ