Year Ender 2023: பிரதமர் மோடி (PM Modi) தலைமையிலான பாஜக அரசு மத்தியில் கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சியமைத்தது. தற்போது வரை ஒன்பதரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வரும் நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. 2024ஆம் ஆண்டில் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், பாஜக அரசுக்கு 2023ஆம் ஆண்டு என்பது மிக முக்கிய ஆண்டாக பார்க்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தொலைநோக்காக களத்தில் பல பணிகளை தொடங்கிவிட்டது என்பது அரசியல் வல்லுநர்களின் பார்வையாக உள்ளது. அதுவும் இந்தாண்டு தொடக்கத்தில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் என முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வென்றுள்ளது. 


மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி தக்கவைத்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. முன்னர் கூறியது போன்று பாஜகவுக்கு முக்கியமாக பார்க்கப்படும் இந்த 2023ஆம் ஆண்டில், மத்திய பாஜக அரசின் டாப் 5 அறிவிப்புகளை இங்கு காணலாம். 


மேலும் படிக்க | சந்திரபாபு நாயுடுவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு


இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு


பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் இலவச ரேஷன் திட்டம் (Free Ration Scheme) குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு (Central Government) முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டித்தது. 81 கோடி பயனார்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் மூலம் 2028ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மொத்த செலவு ரூ.11.8 லட்சம் கோடியாகும்.


மகளிர் இடஒதுக்கீடு மசோதா


இந்திய அரசியல் என்பது பாலின சமத்துவத்தை நோக்கி பெரும் பாய்ச்சலை முன்வைக்க இருப்பதாக இந்த மசோதா (Women Reservation Bill) கொண்டுவரப்பட்டபோது பலராலும் கூறப்பட்டது. நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா 2023ஆம் ஆண்டு செப். 19ஆம் தேதி மக்களவையிலும், செப். 21ஆம் தேதி மாநிலங்களைவயிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு செப். 29ஆம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், இது சட்டமாக மாறியது. 


2000 ரூபாய் நோட்டுக்கு தடை 


2016ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த பின்னர் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்தது. அதன்பின், 2000 ரூபாய் நோட்டு (Rs 2000 Note Ban) மக்களிடம் அதிக புழக்கத்தில் வரவில்லை என கூறப்பட்டது. இதை தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்குமாறு கடந்த மே 19ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. 


முதலில் காலக்கெடு அனைத்து வங்கிகளிலும் செப். 30ஆம் தேதிக்குள் ரூ.2000 நோட்டுகளை கொடுத்து மாறிக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது. அக். 7ஆம் தேதியோடு வங்கிகளில் மாற்றிக்கொள்ளும் நடைமுறை நிறைவடைந்தது. அதன்பின், அக். 9ஆம் தேதியில் இருந்து ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.


சிலிண்டர் விலை குறைப்பு


கடந்த ஆகஸ்ட் மாதம், பிரதமர் நரேந்திர மோடி அரசு, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் (LPG Cylinder Price) 200 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு உஜ்வாலா திட்டத்தின் பயனார்களுக்கு கூடுதல் பலனை அளித்தது.  அவர்களுக்கு ஏற்கெனவே இருந்த தள்ளுபடியுடன் தற்போது சலுகையையும் சேர்த்து விலையில் 400 ரூபாய் குறைந்தது. 


விஸ்வகர்மா யோஜனா


இந்தாண்டு சுதந்திர தினம் அன்று செங்கோட்டையில் உரையாற்றிய போது பிரதமர் மோடி இந்த முக்கிய திட்டத்தை அறிவித்தார். விஸ்வகர்மா யோஜனா திட்டமான இதற்கு சுமார் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தார். இதில், கைவினை கலைஞர்கள், கைவினை தொழிலாளர்கள் ஆகியோருக்கு அடையாள அட்டைகள், சான்றிதழ்கள், ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன்கள் மற்றும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் குடும்பங்களுக்கு பயிற்சியளிப்பும் இந்த திட்டத்தின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் உள்ளதாக எதிர்ப்புகளும் எழுந்தன. 


மேலும் படிக்க | 'உரிய ஊதியமில்லை' - சுரங்க விபத்து மீட்புப் பணியில் உதவிய எலி வளை தொழிலாளர்கள் குமுறல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ