Congress Candidates List: டெல்லி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அக்கட்சியின் பொதுச்சலெயாளர் கே.சி. வேணுகோபால், பொருளாளர் அஜய் மாக்கான், அக்கட்சியின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு தலைவர் பவன் கேரா ஆகியோர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். இதில், மக்களவை தேர்தலுக்கான (Lok Sabha Election 2024) காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

39 வேட்பாளர்கள் அறிவிப்பு


முதற்கட்டமாக, 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 15 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் எனவும், 24 எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக ராகுல் காந்தி (Rahul Gandhi) கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, லட்சத்தீவு, நாகலாந்து, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரின் 6 தொகுதிகள், கர்நாடகவின் 7 தொகுதிகள், கேரளாவின் 16 தொகுதிகள், தெலங்கானாவின் 4 தொகுதிகள், மேகாலயாவின் 2 தொகுதிகள், லட்சத்தீவு, நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 39 தொகுதிகளில் 27 தொகுதிகள் தென்மாநிலங்களில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஆந்திராவில் உருவாகும் தேர்தல் கூட்டணி! பிரசாந்த் கிஷோரின் ஆருடம் பலிக்குமா? பொய்க்குமா?



முக்கிய வேட்பாளர்கள்...


ராகுல் காந்தி கடந்த இரு தேர்தல்களை போலவே வயநாட்டில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சத்தீஸ்கர் முதலமைச்சராக இருந்த பூபேஷ் பாகல் ராஜ்நந்த்காவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறார். பெங்களூரு புறநகர் தொகுதியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் போட்டியிட உள்ளார். 



கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா போட்டியிடுகிறார். சிவராஜ்குமார் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின் போது இவர் காங்கிரஸ் கட்சியில இணைந்தார். கேரளாவின் ஆழாப்புழாவில் இருந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திருவனந்தபுரத்தில் இருந்து சசிதரூர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.


பாஜக vs காங்கிரஸ்


சமீபத்தில், பாஜக சார்பில் நாடு முழுவதும் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் வெளியிடப்பட்டது. அதில் 12 வேட்பாளர்கள் கேரளாவில் இருந்து அறிவிக்கப்பட்டனர். திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக கே. முரளிதரன் என்ற வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்கி உள்ளது. இவர் கேரள முன்னாள் முதலமைச்சர் கருணாகரனின் மகன் ஆவார். 


முக்கியமாக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ