டெல்லியில் வலுவான நில அதிர்வு... ஆப்கானில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, டெல்லியின் தேசிய தலைநகர் பகுதியில் (Delhi-NCR) கடுமையான நில அதிர்வும் மக்களால் உணரப்பட்டது. ஆப்கான் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, டெல்லியின் தேசிய தலைநகர் பகுதியில் (Delhi-NCR) கடுமையான நில அதிர்வும் மக்களால் உணரப்பட்டது. ஆப்கான் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.
இதுகுறித்து இந்தியாவின் தேசிய நில அதிர்வுக்கான தேசிய ஆய்வு மையம் (National Center For Seismology) அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில்,"ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோளில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. இன்று (ஆக. 29) காலை 11.26 மணியளிவில் ஏற்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 255 கி.மீ., ஆழத்திற்கு நிலநடுக்கம் இருந்துள்ளது. இருப்பினும், இதுவரை இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவரவில்லை.
இதேபோல், கடந்த ஆக. 16ஆம் தேதியும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கு 4.8 ஆக அது பதிவானது என்றும் தேசிய நில அதிர்வுக்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆக. 17ஆம் தேதி இரவு அந்த நிலநடுக்கம் 130 கி.மீ., ஆழத்திற்கு மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் இடத்திலும், நகரும் இடத்திலும் ஆப்கானிஸ்தான் அமைந்திருக்கும் என்பதால் அந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் உள்ள விரிசல்கள் பல அந்த இடங்களில் இருப்பதால் டெக்டோனிக் தகடுகளின் மோதலுக்கு வழிவகுக்கிறது, இது பூகம்பங்களுக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | 80 வயது தாத்தாவை திருமணம் செய்த 23 வயது பெண்.. இப்படி ஒரு காதல் கதையா!
மத்திய டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகியது. அதில் நீண்ட போக்குவரத்து நெரிசலை பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் டெல்லியின் மாளவியா நகர், முகர்பா சௌக், சங்கம் விஹாரில் உள்ள எம்பி சாலை, திக்ரி எல்லை பகுதியில் இருக்கும் ரோஹ்தக் சாலை போன்ற பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சில பகுதிகளில் டெல்லி போக்குவரத்து காவல்துறையால் நிலைமையை மீட்டெடுத்தபோது, ரஜோக்ரி மேம்பாலம், கஞ்சவாலா சாலையில் புத்த விஹார் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து என்பது வழக்கமான நாள்களை விட மெதுவாக இருப்பதாக பலர் புகார்கள் வந்தன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ