Rahul Gandhi On Caste Census: ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் (Jharkhand Assembly Election 2024) நடைபெறுகிறது. முதல் கட்டமாக 43 தொகுதிகளில் கடந்த நவ. 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (நவ. 20) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக (Maharashtra Assembly Election 2024) நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் (Wayanadu Lok Sabha By-election) மற்றும் வெவ்வேறு மாநிலங்களின் 47 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவ. 13ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து, உத்தரகாண்டின் கேதர்நாத் சட்டமன்ற தொகுதிக்கும், மகாராஷ்டிராவின் நான்டெட் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இந்த அனைத்து தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை வரும் நவ. 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


ஓய்ந்தது பிரச்சாரம்


இதில் மத்தியில் ஆளும் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக செயலாற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலும், பாஜக ஆளும் மாகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலும், பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை இடைத்தேர்தலும் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இந்த தேர்தல்களின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. அந்த வகையில், ஜார்க்கண்ட் இரண்டாம் கட்ட தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தலின் பிராச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.


மேலும் படிக்க | 1 முதல் 12 வரை நேரடி வகுப்பு கிடையாது! இனி ஆன்லைன் கிளாஸ் தான் -அமலுக்கு வந்த உத்தரவு


பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் தனது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலங்களில் நிறைவேற்றாதது பெரும் தவறுதான் என்பதை ஒப்புகொண்டது மட்டுமின்றி, இனி வரும் காலங்களில் காங்கிரஸ் ஆளும், காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.


சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவேற்றப்படும்


அதில் பேசிய அவர்,"ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் சேர்ந்துதான் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு யோசனையை பெற்றது. அதனை நாங்கள் செயல்படுத்தாதது பெரிய தவறுதான். கர்நாடகாவிலும், தெலுங்கானாவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பல்வேறு ஆய்வாளர்கள், அறிஞர்களை சந்தித்து வருகிறது. பொதுமக்களின் கருத்துக்கேட்பு மூலம் சாதிவாரி கணக்கெடுப்பில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 


சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கொண்டுவருவதில் காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான பார்வை இருக்கிறது. பின்தங்கிய வகுப்பினர் குறித்த போதிய தரவுகள் இல்லாததுதான் காத்திரமான கொள்கை உருவாக்கம் முதல் சமமாக பொருளாதாரத்தை பகிர்ந்தளிப்பதில் இடையூறாக இருக்கிறது. நம்மிடம் துல்லியமான தரவுகள் இருந்தால் அதற்கேற்ப கொள்கைகளை வகுத்து, அனைத்து பிரிவினருக்கும் நீதியை நிலைநாட்ட இயலும்.


இட ஒதுக்கீடு நீக்கம்...? 


நான் மக்களவை தேர்தலின் போது சொன்னது போலவே சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கொண்டுவரும். ஜார்க்கண்டிலும் செயல்படுத்தும். நாட்டின் மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் இது பெரிய பங்களிப்பை அளிக்கும். ஆனால், பாஜகவினருக்கு இதை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட, எப்படி செய்ய வேண்டும் என தெரியாது" என்றார். 


மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் 50% என்ற இட ஒதுக்கீடு அடுக்கை நீக்குவோம் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பின்கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதிலும் ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் உள்ள பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.


மேலும் படிக்க | மணிப்பூர் வன்முறை: அரசுக்கு 24 மணி நேர கெடு.. அமைச்சர், எம்எல்ஏ-க்கள் வீடு சூறையாடல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ