Supreme Court New Order For Delhi AQR: வட மாநிலங்களில் குறிப்பாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வரும் நிலையில், டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியம் (என்சிஆர்) முழுவதும் 10 மற்றும் 12 ஆம் உட்பட அனைத்து வகுப்புக்களும் நேரடியாக நடந்தக்கூடாது என்றும், ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்புகளை தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே பாடம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, இன்று முதல் (திங்கட்கிழமை) 1 வகுப்பு முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் கிளாஸ் எடுக்கப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி, மாணவ - மாணவிகளின் நலன் கருதி, அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
அபாயகரமான காற்று மாசுபாட்டிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், GRAP 4 நிலைகளின் கீழ் மாசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் குறித்து உச்ச நீதிமன்றம் டெல்லி அரசு மற்றும் காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் (CAQM) கேள்வி எழுப்பியது.
காற்றின் தரக் குறியீடு (AQI) 450க்குக் குறைவாக இருந்தாலும், GRAP-4 கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு குழுக்களை உடனடியாக அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
டெல்லியில் காற்று மாசு தடுக்ககோரி வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மசிஹ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், 'அனைத்து குடிமக்களும் மாசு இல்லாத சூழலில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீடு (AQI) அளவு 450க்கு குறைவாக இருந்தாலும் GRAP-4 கட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். எங்கள் அனுமதி இல்லாமல் GRAP-4 கட்டத்தின் கீழ் உள்ள தடைகளை தளர்த்த வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தற்போது நிலவும் காற்று மாசுபாட்டினை முழுமையாக குறைக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இறங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி-என்சிஆர் முழுவதும் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது என்மவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்து நவம்பர் 22 ஆம் தேதிக்குள் தங்கள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு டெல்லி அரசு மற்றும் என்சிஆர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் படிக்க - உச்சகட்டத்தில் காற்றுமாசு! நுரையீரலை பாதுக்காக்க இந்த டயட் நல்லது
மேலும் படிக்க - Lungs Health: சுவாசத்திற்கு ஆதாரமான ‘நுரையீரல்’ வலுப்பெற செய்ய வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ