Delhi Liquor Policy Scam Case Latest News Updates: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதத்தில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கே. கவிதா (K Kavitha) அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சிறையில் இருந்தபோது இரண்டாவது முறையாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரின் முந்தைய ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் கவிதா முக்கியமானவர் என்றும் விசாரணை முக்கிய நிலையில் இருக்கும்போது ஜாமீன் வழங்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.


உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு


பலவீனமான பெண் (Vulnerable Woman) என்ற ரீதியில் ஜாமீன் வழங்கும்படி கவிதா தரப்பு மனுவில் குறிப்பிட்டிருந்த நிலையில், அதையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. கவிதா மெத்த படித்த பெண் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், அவரை பலவீனமான பெண் என கருத இயலாது என்றது. ட

மேலும் படிக்க | பிரதமர் மோடி திறந்த வைத்த சிலை உடைந்தது... வெறும் 9 மாதங்களே ஆச்சு - திடீரென என்னாச்சு?


இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) கவிதா தரப்பு ஜாமீன் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கே. கவிதா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் என்ன இருக்கிறது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  

கவிதாவுக்கு ஜாமீன்


கவிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜரானார். மேலும் பெண்களுக்கு ஜாமீன் வழங்குவது இயல்பான நடவடிக்கைதான் எனவும் அவர் வாதிட்டார். ஆம் ஆத்மி மூத்த தலைவர் மனீஷ் சிசோடியாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை குறிப்பிட்டும் முகுல் ரோத்தஹி வாதிட்டார். 

தொடர்ந்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ அமலாக்கத்துறை சார்பில் ஆஜரானார். கவிதா அவரது மொபைல் போன்களை பார்மட் செய்துவிட்டதாகவும், அதன்மூலம் அவர் ஆதாரங்களை அழித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த கவிதா தரப்பு, இதனை போலியான குற்றச்சாட்டு என்றது. இந்நிலையில், கே. கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.



அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால்? 


முன்னதாக, South Group நிறுவனம், டெல்லி மதுபான கொள்கையை வடிவமைக்கும் போது தங்களுக்கு சாதகமான செயல்பட ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி கொடுத்ததாகவும், இதில் South Group நிறுவனத்துடன் கவிதாவுக்கு தொடர்பிருப்பதாகவும் அமலாக்கத்துறையால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்களை சமர்பிக்கும்படி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. 


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோர் கைதாகி ஜாமீனில் வெளிவந்தனர். இவர்களை அடுத்து தற்போது கவிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டுகிறது அவரும் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் கைதாகி சிறையில் உள்ளார். கவிதாவின் ஜாமீன், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க வழிவகை செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்... உச்ச நீதிமன்றம் உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ