Monkeypox Virus In India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று (Mpox Clade 2 Virus) இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,"குரங்கம்மை (Mpox) தொற்று குறித்து சந்தேகிக்கப்பட்ட நபரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் தோற்று கண்டறியப்பட்டது" என குறிப்பிட்டுள்ளது. இவர் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர் ஆவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும்,  தற்போது பாதிக்கப்பட்டவரிடம் உறுதிசெய்யப்பட்ட தொற்று மேற்கு ஆப்பிரிக்காவின் Clade 2 Mpox வைரஸ் ஆகும். இவரிடம் கண்டறியப்பட்ட Clade 1 தொற்றுக்கும், தற்போது உலக சுகாதார மையம் அறிவித்திருக்கும் பொது சுகாதார அவசரநிலைக்கும் தொடர்பில்லை என விளக்கியுள்ளது. Clade 1 வைரஸ் குறித்துதான் தற்போது உலக சுகாதாரா மையம் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. 


அச்சப்படத் தேவையில்லை


தற்போது கண்டறியப்பட்ட Clade 2 தொற்றால் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்தம் இந்தியாவில் 30 பேர் பாதிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, மக்கள் இதற்கு அச்சப்பட தேவையில்லை என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


மேலும் படிக்க | குரங்கு அம்மையின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்ட வேண்டாம்


ஒரு நாட்டில் இருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்த ஒரு இளம் ஆண் நபர், Clade 1 Mpox பரவலால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், தற்போது அவர் Clade 2 தொற்றால்தான் பாதிக்கப்பட்டிருப்பது இப்போது உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தற்போது மருத்துவ ரீதியாக நிலையாக இருக்கிறார் என்றும் வேறு நோய் எதுவும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Clade 1 தொற்று


இந்த Clade 1 தொற்று ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, ருவாண்டா, உகாண்டா, புருண்டி போன்றவற்றில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது ஆப்ரிக்காவிற்கு அப்பால் பல்வேறு நாடுகளில் குரங்கம்மை Clade 1 பரவும் அபாயத்தின் அடிப்படையில் கடந்த மாதம் Mpox தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக WHO அறிவித்தது. DRC என்ற புதிய வேரியண்டும் இதில் இருப்பதாக ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது Clade 1 தொற்றால் பாகிஸ்தானில் 5 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


மத்திய அரசின் அறிவுறுத்தல்


முன்னதாக, மாநில அரசுகளுக்கு பொது சுகாதாரத் தயார்நிலை குறித்து  மத்திய சுகாதார அமைச்சகம் இன்று கடிதம் எழுதியிருந்தது. குறிப்பாக மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள சுகாதார வசதிகளை மூத்த அதிகாரிகளை கொண்ட மதிப்பாய்வு செய்யவும் சுகாதார அமைச்சகம் உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. 


அதிலும் மருத்துவமனையில் குறிப்பாக தோல் நோய் மற்றும் பாலியல் மூலம் பரவும் நோய் உள்ளிட்டவைகளில்  பணிபுரிபவர்களிடம் Mpox அறிகுறிகள், வேறுபட்ட நோயறிதல்கள், Mpox வழக்கு கண்டறியப்படும்பட்சத்தில் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சுகாதாரப் பணியாளர்களுக்கு விளக்கமளிப்பது ஆகியவை குறித்தும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Mpox அதிகம் காணப்படுவது யாரிடம்?


Mpox நோயாளிகளுக்கு பெரும்பாலும் காய்ச்சல் பொதுவான அறிகுறியாக இருப்பதாக WHO கூறுகிறது. பெரும்பாலும் 18-45 வயதான ஆண்களிடம் இந்த நோய் அதிகம் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறப்புறப்பு மற்றும் பிற பகுதிகளில் தோல் சார்ந்த அரிப்புகளும் ஏற்படுகிறது. இது மனிதர்களிடைய பாலியல் ரீதியான உறவின் மூலம் அதிகம் பரவுகிறது. பாலியல் அல்லாத பிற தொடர்புகளாலும் இது பரவும். 


WHO அளித்த தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டின் ஜனவரி முதல் 2024ஆம் ஆண்டின் ஆகஸ்ட் வரை இதுவரை 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வகங்கள் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 22 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.


மேலும் படிக்க | Mpox Update: பெரியம்மை தடுப்பூசி குரங்கு அம்மை வைரஸ் தாக்குதலை தடுக்குமா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ