கொரோனா சிகிச்சைக்கு “virafin” மருந்தை பயன்படுத்த ஒப்புதல்!
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் விராஃபின் (virafin) மருந்தை பயன்படுத்த பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன. நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி, நாட்டில் 3,32,730 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் (Corona Virus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் வெறும் 24 மணி நேரத்தில் 300,000 தொற்று பாதிப்பு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Oxygen Shortage) மற்றும் நிலவி வருகிறது, இந்தியாவில் ஒரே நாளில் , 2,263 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில் தடுப்பூசி (Corona Vaccine) தொடர்பாக மத்திய முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள விராஃபின் (virafin) எனும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மருந்து எடுத்துக் கொண்ட 7 நாட்களில் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் இருந்தது என்று கூறப்படுகிறது. மேலும் விராஃபின் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு சுவாச மண்டல பாதிப்பை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
ALSO READ | வீட்டிலேயே ஆக்ஸிஜன் அளவை சரியாக பராமரிக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கும் வழிகள்
இந்த பரிசோதனை 91.15 சதவீத நோயாளிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்ட லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஸைடஸ் நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் 20-25 மையங்களில் 250 நோயாளிகளுக்கு மூன்றாம் கட்ட மனித பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விரிவான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஸைடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR