PM Modi Congrats DRDO Scientist: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என சற்று நேரத்திற்கு முன் தகவல்கள் வெளியாகின. இதில், பிரதமர் மோடி குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட போகிறார் என தகவல்கள் தெரிவித்தன. இல்லையெனில், மக்களவை தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிடலாம் எனவும் கூறப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பிரதமர் மோடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பதிவில், "MIRV தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் மிஷன் திவ்யஸ்த்ரா என்ற முதல் பறப்புச் சோதனையை முன்னிட்டு நம் DRDO விஞ்ஞானிகளை நினைத்து பெருமைகொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், மிஷன் திவ்யஸ்த்ரா வெற்றியடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



மேலும் படிக்க | பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்க தடை... கர்நாடகா அரசு அதிரடி நடவடிக்கை!


முன்னதாக பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் மக்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாதும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்பட்டது. இந்த சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டாலும் அதில் அமல்படுத்துவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த DRDO ட்வீட்டுக்கு சில நிமிடங்களுக்கு பின்னர் சிஏஏ அமலாவதாக அறிவிப்பு வெளியானது. 


எதிர்கட்சி தலைவர்கள் முதல் பாஜக ஆட்சி செய்யாத மாநில முதலமைச்சர்கள் என பலரும் இச்சட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால் வங்கதேசம்,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து பாதிக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் உட்பட இஸ்லாமியர் அல்லாத குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. அதிலும் குறிப்பாக, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். 



முன்னதாக, பிரதமர் மோடி மக்களை சந்திக்க இருக்கிறார் என கூறியதும் ஒரு பதிவர், "அவசர நிலை அறிவிக்கப்பட உள்ளதா" என பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் பதிவு போட்ட மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி,"அவர் என்ன நிலாவுக்கு போகப் போகிறாரா" என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். 


மேலும் படிக்க | நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை கொடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ