Pregnancy Service Jobs Scam: இந்தியாவின் பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதிவேக இணையம், ஸ்மார்ட்போன் பயன்பாடு என கிராமப்புறங்களையும் சென்றடைந்திருக்கிறது. இருப்பினும், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் இன்னும் இந்திய கிராமப்புறங்களில் நீடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து புதிய மோசடி ஒன்று முளைத்துள்ளது எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணக்கார பெண்களுடன் உடலுறவு கொண்டு, அவர்களை கர்ப்பமாக்கினால் கட்டுக்கட்டாக பணமும், சொத்துக்களில் பங்கும் கிடைக்கும் என இந்த மோசடிக்காரர்கள் இளைஞர்களிடம் வலைவீசி உள்ளனர். பேஸ்புக் குழுவில் பதிவிட்ட ஒரு நபர்,"யாராவது என்னை மூன்று மாதங்களுக்குள் கர்ப்பமாக்கினால் அவர்ககளுக்கு ரூ.20 லட்சம் கிடைக்கும். அவர் என்னுடனே வாழ வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள ஒரு அலைபேசி எண்ணையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.


பணக்கார பெண்களுடன் உடலுறவு...


அந்த அலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் ஒரு ஆண் அதில் பேசி இருக்கிறார். அதில் அவர்,"நாங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறோம். எங்களின் டிரைவர் உங்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, மேடம்-ஐ சந்திக்க வைப்பார். நீங்கள் அவரை கர்ப்பமாக்காவிட்டாலும் உங்களுக்கு ரூ.5 லட்சம் கிடைக்கும்" என கூறியுள்ளார். மேலும், இதற்கு பதிவு செய்ய ரூ.999 செலுத்த வேண்டும் என்றும் UPI மற்றும் QR கோட் மூலம் பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதாவது, Pregnancy Service Jobs என்ற பெயரில் பணக்கார பெண்களை கர்ப்பமாக்குவதை ஒரு வேலையாக அந்த பேஸ்புக் குரூப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைக்கு பதிவு செய்யவே 999 ரூபாயை வசூலிப்பதாக கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்... கஸ்டமர் கேருக்கு அழைத்த லஷ்கர்-இ-தொய்பா சிஇஓ...? மும்பையில் பரபரப்பு


இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட ஹரியானாவை சேர்ந்த ரமேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மேலும் கூறுகையில், இதுமட்டுமின்றி பல்வேறு வகையில் அவர்கள் பொய் சொல்லி கட்டணம் வசூலிப்பார்கள் என்று கூறினார். ரமேஷ் குமார் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சேர்ந்து மட்டும் இரண்டு மாதங்களில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பறிகொடுத்துள்ளனர். இந்த மோசடியில் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் சிக்கி உள்ளனர். 


தொடரும் மோசடிகள்


மோசடிக்காரர்கள் ரமேஷ் குமாரிடம், ஒரு 24 வயது பெண்ணின் புகைப்படம், ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை பகிர்ந்துள்ளனர். மேலும், இதனை ரகசியமாக வைத்துக்கொள்ளும்படியும் மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். இந்த ஆவணங்களையும் அவர் ஊடகத்திடம் காட்டி உள்ளார். இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் வேலையில்லாதவர்கள், குறைவான ஊதியம் பெறுபவர்கள், ஏழை மக்கள்தான் அதிகம் சிக்கி உள்ளனர். இவர்களின் பணத் தேவையை குறிவைத்து மோசடிக்காரர்கள் செயல்படுகின்றனர்.


இதுபோன்ற Pregnancy Service Jobs என்ற பெயரில் மட்டும் 9 பேஸ்புக் குரூப்கள் இருப்பதாகவும் அதிலும் 28 ஆயிரம் பேர் உறுப்பினராக இருப்பதாகவும், தனிப்பட்ட பேஸ்புக் பக்கம் ஒன்றிருப்பதாகவும் அதில் 1400 பாலோயர்ஸ் உள்ளனர். அதில் பல குழுக்கள் இன்றும் செயலில் உள்ளதாகவும், அந்த பக்கத்தில் இருந்தும் பதிவுகள் வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடிகள் வடமாநிலங்களில் மட்டும் இருப்பதாக நினைத்து அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அனைத்து மாநில காவல்துறையும் இதுபோன்ற மோசடி குழுக்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் படிக்க | வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கட்டுப்பாடு! பைக்கிற்கு ரூ. 200 மட்டுமே அனுமதி!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ