Jammu And Kashmir Election Result Latest News Updates: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை நாடே தற்போது எதிர்நோக்கி காத்திருக்கின்றன. சுமார் 6 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசமாக மாறப்பட்டு தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெற்ற பின்னர் தற்போது முதல்முறையாக தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) என மும்முனை போட்டி நிலவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மற்றொரு பக்கம், ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் 5 நியமன எம்எல்ஏக்களை நியமிப்பார் என்பதால் மொத்தம் 95 இடங்கள் சட்டப்பேரவையில் உள்ளன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 48 இடங்கள் தேவையாகும். ஆனால், தற்போது மும்முனை போட்டி நிலவுவதால் வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதையே தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவிக்கின்றன.


5 நியமன எம்எல்ஏக்கள்


ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமையவே அதிக வாய்ப்புள்ளது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கும் சூழலில் துணை நிலை ஆளுநரின் நியமன எம்எல்ஏக்கள் மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. ஏனென்றால், இந்த 5 நியமன எம்எல்ஏக்கள் மூலம் சட்டப்பேரவை முடிவுகளை தலைகீழாக மாற்றும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க |  அரியணை ஏற காங்கிரஸ் போட்ட முக்கிய வியூகம்... குஷியில் ராகுல் காந்தி - ஹரியானா முதல்வர் பதவி யாருக்கு?


எனவேதான், துணைநிலை ஆளுநரின் இந்த நியமனச் செயல்முறையின் தாக்கங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களின் கவலைகளை எழுப்பி வருகின்றனர். இந்த நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ன பங்கு வகிக்கிறார்கள் என்றும் அவர்களின் தேர்வை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பின் மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. முன்னரே, கூறப்பட்டது போல் 95 தொகுதிகளில் ஒரு கட்சி 48 இடங்களை கைப்பற்றியாக வேண்டும் என்பதால் இந்த நியமன எம்எல்ஏக்கள் யார் ஆட்சியமைப்பார்கள் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். 


எதிர்க்கும் காங்கிரஸ் 


கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. துணை நிலை ஆளுநர் மொத்தம் 5 எம்எல்ஏக்களை நியமிக்க வேண்டும். அதில் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் இருந்து அகதிகள் (PoJK) ஆகியோருக்கும் பிரதிநிதித்துவம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். 


இந்த நியமன எம்எல்ஏ முறைக்கு ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் காங்கிரஸ் மூத்த துணை தலைவர் ரவீந்தர் சர்மா கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது,"ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் முன் துணைநிலை கவர்னர் ஐந்து எம்எல்ஏக்களை நியமனம் செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். அத்தகைய எந்த நடவடிக்கையும் ஜனநாயகம் மீதும், மக்கள் ஆணை மீதும், அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் மீதுமான தாக்குதலாகும். புதிய அரசு அமைந்த பின்னரே 5 எம்எல்ஏக்களை நியமனம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. வேறு எந்த அணுகுமுறையும் மக்களின் ஆணையை மீறுவதாக இருக்கும்.


மேலும் படிக்க |  Election Result 2024: ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் முக்கிய அம்சம்


எப்போது நியமிக்கப்போகிறார் துணைநிலை ஆளுநர்?


தேர்தல் முடிவுகளில் தங்களுக்குச் சாதகமாக மாற்ற ஆளும் பாஜகவின் முயற்சி இது. அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்கு பாஜகவின் விரக்தியை இது எடுத்துக்காட்டுகிறது. எனவே காங்கிரஸ் இதனை எதிர்த்து போராடும். 


எவ்வாறாயினும், தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே துணைநிலை கவர்னர் செயல்பட வேண்டும். தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பான்மை அல்லது சிறுபான்மை அந்தஸ்தை மாற்றுவதற்கான நியமன விதியை தவறாகப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும். அரசாங்கம் அமைக்கும் முன் அத்தகைய நியமனங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது. பாஜக நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதியளித்தது. ஆனால் அவர்கள் PoJK சமூகத்திற்கு ஒரு இடத்தை மட்டுமே முன்மொழிந்துள்ளது. அவர்களுக்கான முந்தைய எண்ணிக்கை 8 ஆக இருந்தது" என்றார். 


எனவே, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா 5 எம்எல்ஏக்களை எப்போது, எப்படி நியமிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நியமன எம்எல்ஏக்கள் ஆட்சி அமைக்கும் முன்னரே நியமிக்கப்பட்டால் இது சட்டப்பேரவை முடிவுகளை தலைகீழாக மாற்றும். 


மேலும் படிக்க |  Haryana State Election 2024: மீண்டும் 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா பாஜக? காங்கிரஸ் நிலை என்ன?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ