Haryana, Jammu and Kashmir Election Result 2024 Live: காங்கிரஸிற்கு ஜம்முவில் ஆட்சி உறுதி?, ஹரியானாவில் பெரிய ஷாக் - மாறும் காட்சிகள்

Jammu and Kashmir Election Result 2024 LIVE Update: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஆக. 8) நடைபெறுகிறது. இதுகுறித்து உடனடி தகவல்களை இங்கு அறிந்துகொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 8, 2024, 09:52 AM IST
    Election Results 2024 Live Update: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
Live Blog

Jammu and Kashmir Election Result 2024 LIVE Update: ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மற்றும் ஹரியானா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக். 8) நடைபெறுகிறது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த அக். 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் ஆகும். இங்குள்ள 90 தொகுதிகளில் மூன்று கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன.

அந்த வகையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மீதுதான் நாட்டின் மொத்தம் கவனம் குவிந்திருக்கிறது. ஏனென்றால், பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் ஹரியானாவையும், ஜம்மு காஷ்மீரையும் கைப்பற்றப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஹரியானாவிலும், ஜம்மு காஷ்மீரிலும் கடுமையாக போட்டியிட்டுள்ளன. 

யாருக்கு வெற்றிக்கனி கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் குறித்த உடனடி தகவல்களை அறிந்துகொள்ளவும் இந்த நேரலைப் பக்கத்துடன் இணைந்திருங்கள்... 

8 October, 2024

  • 09:44 AM

    Haryana Election Result 2024: ஹரியானாவில் காங்கிரஸிற்கு ஷாக்

    ஹரியானா மாநிலத்தில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து முன்னிலையில் இருந்த காங்கிரஸ், தற்போது 10 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது பாஜகவும் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது, அரசியல் பார்வையாளர்களை உற்றுநோக்க வைத்துள்ளது. 

    மொத்த தொகுதிகள்: 90

    காங்கிரஸ்: 41
    பாஜக: 44
    இந்திய தேசிய லோக் தளம்: 1
    மற்றவை: 4

  • 09:35 AM

    Haryana Election Result 2024 Live: தொடர் முன்னிலையில் வினேஷ் போகத்

    ஹரியானாவில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகத் தற்போது முன்னிலையில் உள்ளார். அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் பைராகி தொடர் பின்னடைவில் இருக்கிறார்.

     

  • 08:57 AM

    Jammu Kashmir Election Result 2024: ஜம்முவிலும் முந்துமா காங்கிரஸ்?

    ஜம்மு காஷ்மீர் 

    காங்கிரஸ் - 44
    பாஜக -  32
    பிடிபி - 3
    மற்றவை - 11

  • 08:41 AM

    Haryana Election Result Live Updates: ஹரியானாவில் கெத்து காட்டும் காங்கிரஸ்

    மொத்த தொகுதிகள்: 90

    காங்கிரஸ்: 67
    பாஜக: 21
    இந்திய தேசிய லோக் தளம்: 1
    மற்றவை: 1

  • 08:25 AM

    Haryana, Jammu And Kashmir Election Result 2024: முன்னிலை விவரங்கள் 

    ஹரியானா:

    காங்கிரஸ் - 44
    பாஜக - 20
    இந்திய தேசிய லோக் தளம் - 2
    மற்றவை - 4

    ஜம்மு காஷ்மீர் 

    காங்கிரஸ் - 25
    பாஜக -  22
    பிடிபி - 2
    மற்றவை - 4

  • 08:22 AM

    Haryana, Jammu Kashmir Election Result 2024: ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் - காங்கிரஸ் முன்னிலை

    ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

  • 07:55 AM

    Haryana, Jammu And Kashmir Election Result 2024: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

    ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கின. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுவது வழக்கமாகும். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

  • 07:49 AM

    Haryana, Jammu And Kashmir Election Result 2024: குஷியில் காங்கிரஸ்

    2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. அதன்பின் நடைபெற்ற இந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் பாஜகவை விட முன்னிலை பெறும் என எதிர்பார்க்கிறது.

    ஜம்முவில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளது என்றாலும் காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஹரியானாவில் ஆட்சி அமைப்போம் என்ற பெரும் நம்பிக்கையுடன் வலம் வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே தற்போது டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது இதையே காட்டுகிறது.  

  • 07:45 AM

    Haryana Election Result 2024: ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் - முதல்வர் யார்?

    ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் ஹரியானாவில் ஆட்சியை கைப்பற்றும்பட்சத்தில் முதல்வராக யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வராக இருந்த பூபேந்திர ஹூடா, காங்கிரஸ் கட்சியின் தலித் தலைவர்களில் ஒருவரான குமாரி செல்ஜா உள்ளிட்டோர் முதல்வர் ரேஸில் உள்ளனர். 

     

     

  • 07:41 AM

    Haryana Election Result 2024: ஹரியானா - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

    India Today - CVoter: பாஜக: 20-28, காங்கிரஸ்: 50-58, மற்றவை: 0-14
    Times Now: பாஜக: 22-32, காங்கிரஸ்: 50-64, மற்றவை: 2-8
    News 24: பாஜக: 18-24, காங்கிரஸ்: 55-62, மற்றவை: 2-5
    Republic TV- P Marq: பாஜக:  18-24, காங்கிரஸ்: 55-62, மற்றவை: 2-5

  • 07:35 AM

    Haryana Election Result 2024: 2014 மற்றும் 2019 சட்டப்பேரவை தேர்தல் - ஓர் பார்வை

    கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 40 தொகுதிகளை கைப்பற்றியது. அதிக தொகுதிகளை கைப்பற்றினாலும் போதுமான மெஜாரிட்டி இல்லாத நிலையில், தேர்தலுக்கு பின் ஜனநாயக ஜனதா கட்சி உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. மேலும் 7 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவும் பாஜகவுக்கு இருந்தது. அதற்கு முன், 2014ஆம் ஆண்டில் 47 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஹரியானாவில் ஆட்சி அமைத்தது. 

  • 07:33 AM

    Haryana Election Result 2024: தனித்து நின்ற ஆம் ஆத்மி கட்சி

    ஹரியானா மாநிலத்திற்கு அருகாமையில் உள்ள டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்காமல் தனித்து 88 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

  • 07:21 AM

    Haryana Election Result 2024: பாஜக vs காங்கிரஸ்

    ஹரியானாவில் உள்ள மொத்த 90 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக 89 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும் கூட்டணியுடன் போட்டியிட்டன. துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி 66 தொகுதிகளிலும், சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 12 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

  • 07:14 AM

    Jammu And Kashmir Election Result 2024: தொங்கு சட்டப்பேரவையும்... 5 நியமன எம்எல்ஏக்களும்...

    ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப்பேரவை தொகுதிகள் மட்டுமின்றி 5 நியமன எம்எல்ஏக்களையும் சேர்த்து மொத்தம் 95 இடங்கள் உள்ளன. எனவே, ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மையாக ஒரு கட்சி 48 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் 90 தொகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அதன் முடிவுகளின்படி பார்த்தோமானால் ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளது. எனவே, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நியமிக்க இருக்கும் 5 எம்எல்ஏக்கள் மீதுதான் தற்போது ஒட்டுமொத்த கவனமும் உள்ளது. 

  • 07:08 AM

    Jammu And Kashmir Election Result 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

    Dainik Bhaskar: பாஜக: 20 – 25, காங்கிரஸ்: 35 – 40, பிடிபி: 4 – 7, மற்றவை: 12 – 18
    India Today-C Voter: பாஜக: 27 – 32, காங்கிரஸ்: 40 – 48, பிடிபி: 6 – 12, மற்றவை: 6 – 11
    Peoples Pulse: பாஜக: 23 – 27, காங்கிரஸ்: 46 – 50, பிடிபி: 7 – 11, மற்றவை: 4 – 6
    Axis My India: பாஜக: 24 – 34, காங்கிரஸ்: 35 – 45, பிடிபி: 4 – 6, மற்றவை: 8 – 23

     

  • 07:04 AM

    Jammu And Kashmir Election Result 2024: மும்முனை போட்டி 

    பாஜக தனித்து நின்று 62 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி சார்பில் பரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 81 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.

  • 07:00 AM

    Jammu And Kashmir Election Result 2024: 3 கட்டங்களாக வாக்குப்பதிவு

    ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த செப். 18ஆம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளிலும், கடந்த செப். 25ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளிலும், கடந்த அக். 1ஆம் தேதி மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.  

  • 06:57 AM

    Jammu and Kashmir Election Result 2024: 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல்

    ஜம்மு காஷ்மீரில் கடைசியாக 2014ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தது. மெகபூபா முப்தி முதலமைச்சராக இருந்த நிலையில், அவரது ஆட்சி 2018இல் கவிழ்க்கப்பட்டது. பல வருடங்களுக்கு பின்னர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்தாண்டு ஜம்மு காஷ்மீரில் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 

  • 06:56 AM

    Jammu And Kashmir Election Result 2024: யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் 2018ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அதற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு மத்திய அரசால் நீக்கப்பட்டது. அதன்பின்னர் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன. 

Trending News