ஆதார் அட்டை: இன்று இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. அதன்படி இந்தியாவில் அடையாளத்தைக் காட்ட ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், இன்று இந்தியாவில் உள்ள பல திட்டங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் கீழ், ஆதார் அட்டை மூலம் மட்டுமே சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க முடியும். இதனுடன், பல திட்டங்களுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆதார் அட்டை தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் அட்டை
இந்த நிலையில் நீங்கள் ஆதார் அட்டையைப் பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தால், இந்த அப்டேட் உங்களுக்கானது. ஆம், நீங்கள் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் அட்டை மூலமாக நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. 


மேலும் படிக்க | ICCR: அடல் பிஹாரி வாஜ்பாய் பொது உதவித்தொகை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்


UIDAI
உண்மையில், UIDAI வெளியிட்டுள்ள ட்வீட் இன் படி, "உங்கள் ஆதார் பத்து ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, புதுப்பிக்கப்படாமல் இருந்தால், உங்களின் 'அடையாளச் சான்று' மற்றும் 'முகவரிச் சான்று' ஆவணங்களைப் பதிவேற்றி அதை மீண்டும் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ரூ.25, ஆஃப்லைனில் பதிவேற்றம் செய்ய ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.



ஆதார் புதுப்பிப்பு
இத்தகைய சூழ்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரேனும் ஆதார் அட்டையைப் பெற்றிருந்தால், அந்த நபர் அதை மீண்டும் அப்டேட் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்ந்து, ஆதார் அட்டையும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஆதார் அப்டேட் செய்ய https://myaadhaar.uidai.gov.in/ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று, தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் ‘இந்த’ வாகனங்களுக்கு எண்ட்ரி இல்லை: NHAI


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ