ஆதார் அட்டையில் ஏதேனும் பிழைகள் உள்ளதா? ஆன்லைனில் எளிமையாக மாற்றலாம்!

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை புதுப்பிக்க அல்லது மாற்ற விரும்புவோர் யூஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று மாற்றி கொள்ளலாம்.   

Written by - RK Spark | Last Updated : Feb 13, 2023, 08:14 AM IST
  • ஆதார் அட்டையில் திருத்தும் செய்ய நெட் பேங்கிங் மூலம் ரூ.50 செலுத்த வேண்டும்.
  • கட்டணத்தை செலுத்தியதும் உங்களுக்கு சேவை கோரிக்கை எண் அனுப்பப்படும்,
  • ஆன்லைனில் ஆதார் அட்டையில் புதுப்பித்தல் அல்லது திருத்தம் செய்யலாம்.
ஆதார் அட்டையில் ஏதேனும் பிழைகள் உள்ளதா? ஆன்லைனில் எளிமையாக மாற்றலாம்! title=

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் நாட்டிலுள்ள இந்திய குடிமகன்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை விளங்குகிறது.  கடந்த 2012ம் ஆண்டில் யூஐடிஏஐ-ஆல் இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது, இந்த அடையாள ஆவணத்தில் குடிமக்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், முகவரி மற்றும் புகைப்படம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும்.  மக்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை புதுப்பிக்க அல்லது அதில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பினால் யூஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று திருத்தங்களை செய்துகொள்ளலாம்.  வங்கிக் கணக்குகள், மொபைல் மற்றும் இணைய இணைப்புகள், பொது விநியோக முறை (பிடிஎஸ்), ஓய்வூதியங்கள், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திரும்பப் பெறுதல் போன்ற பல அரசாங்கத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் பலவிதமான நற்பலன்களைப் பெறுவதற்கு இந்த ஆதார் அட்டை கட்டாயமாகும். 

மேலும் படிக்க | திருப்பதி: அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்..! உடனே புக் பண்ணுங்க

உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருந்தால் அரசாங்கங்கள் வழங்கும் பலன்களை பெற முடியாமல் போய்விடும் அல்லது வங்கி சம்மந்தமான வேளைகளில் சில பிரச்சனைகள் ஏற்பட நேரிடும். ஆதார் அட்டையில் உங்களது சமீபத்திய முகவரி புதுப்பிப்புகள் அல்லது வேறு ஏதேனும் பிழை இருந்தால் அதனை நீங்கள் திருத்துவது முக்கியம்.  ஆதார் அட்டையில் உள்ள மக்கள்தொகை விவரங்களை புதுப்பிக்க அல்லது மாற்ற விரும்புவோர் யூஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று மாற்றி கொள்ளலாம். ஆன்லைனில் ஆதார் அட்டையில் புதுப்பித்தல் அல்லது திருத்தும் வசதியைப் செய்ய நீங்கள் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டியது அவசியம்.

1) ஆதார் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலை https://ssup.uidai.gov.in/ssup/ க்குச் செல்ல வேண்டும்.

2) பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் ஓடிபி-ஐ பயன்படுத்தி லாக் இன் செய்ய வேண்டும்.

3) பின்னர் 'சர்விஸ்' ஆப்ஷனின் பிரிவில் 'அப்டேட் ஆதார் ஆன்லைன்' என்பதைக் கிளிக் செய்யவும்.

4) பட்டியலில் உள்ள 'எடிட் நேம்' என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து பிழையை தட்டச்சு செய்து திருத்த வேண்டும்.

5) படிவத்தை பிரிவியூ செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.

ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய நீங்கள் டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ரூ.50 செலுத்த வேண்டும்.  கட்டணம் செலுத்தப்பட்டதும், சேவை கோரிக்கை எண் பெறலாம், இந்த எண்ணை பயன்படுத்தி செய்யப்பட்ட கோரிக்கையை நீங்கள் கண்காணிக்கலாம்.  உங்கள் ஆதார் அட்டையில் முகவரி, வயது, பாலினம் மற்றும் பிறந்த தேதியில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு மேலே கூறப்பட்டுள்ள செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம்.  ஆன்லைனில் எளிதாக புதுப்பிக்கலாம் அல்லது ஆதார் பதிவு மையத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News