புது டெல்லி: பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள நன்கனா சாகிப்பில் சீக்கிய இளம்பெண் கடத்தி கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர். மத மாற்றத்தை எதிர்த்த சீக்கியர்களை கண்டித்து அங்குள்ள குருத்வாரா மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, சீக்கியர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பாகிஸ்தான் நன்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு மற்றும் சிரோமணி அகாலிதளம் சார்பில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்தநிலையில், பாகிஸ்தானில் குருத்வாரா மற்றும் சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நங்கனா சஹாப் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். மதவெறி என்பது ஒரு ஆபத்தான, வயதான பழைய விஷமாகும், அதற்கு எல்லைகள் எதுவும் தெரியாது. அன்பு + பரஸ்பர மரியாதை + புரிந்துகொள்ளுதல் என்பது தான் முக்கியம் எனக் கூறியுள்ளார்.


ஏற்கனவே இதஇந்த தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த விஷயத்தில் தலையிட்டு சீக்கியர்களை தாக்குதல் நடத்தும் கும்பலிடம் இருந்து காக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது