பீகார் மாநிலத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலம் ஒரங்காபாத் மாவட்ட சாலையில் சுமார் 50 பயணிகளுடன் நேற்று இரவு சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து திடீர் என கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.       


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த பேருந்து நளந்தா மாவட்டத்தில் ராஜ்கிர் நகரிலிருந்து ஒரு கல்வி பயிற்சியிலிருந்து மாணவர்கள் திரும்பி வந்துள்ளனர். அப்போது, திடீர் என பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


மேலும், இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மாருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். "ஒரு குழந்தை இறந்துவிட்டது. இங்கே ஒப்புக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது மற்றும் சிக்கலானவர்கள் ஜமுய்விடம் குறிப்பிடப்பட்டனர். மருத்துவர்கள் ஒரு குழு அவர்கள் அனைத்து பார்த்து, "ஔரங்காபாத் துணை பிரிவு அதிகாரி (SDO) பிரதீப் குமார் கூறினார்.



இந்த சம்பவம் குறித்து பீகார் மாநிலம் ஒரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பாருன் பொலிஸ் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.