பீகார் வெள்ளம்: 1000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கின; சுமார் 40 லட்சம் பேர் பாதிப்பு
பீகார், அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கம் பயமுறுத்துகின்றன. இந்த மாநிலங்களில் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Bihar Flood Alert 2020: பருவமழை ஒரு நெருக்கடியாக மாறியுள்ளது. அது இப்போது பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. பீகார், அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கம் பயமுறுத்துகின்றன. இந்த மாநிலங்களில் வெள்ளத்தால் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் (Bihar Flood) மாநில பேரிடர் துறையின்படி, மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 3 இறப்புகளும் தர்பங்கா மாவட்டத்தில் நடந்துள்ளன. இதன் மூலம், இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் சுமார் ஆயிரம் கிராமங்கள் இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
பீகார் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர் கூறுகையில், தற்போது வரை 6,000 ரூபாய் நிவாரண தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 60,000 குடும்பங்களின் வாங்கிக் கணக்கில் மாற்றப்பட்டுள்ளது. நாளைக்குள், இந்த தொகை 40,000 பேரின் கணக்கிற்கு மாற்றப்படும். ஆகஸ்ட் 8-10 க்குள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் கணக்கிற்கும் இந்த தொகை மாற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பீகார் சீதாமரி, சிவார், சுபால், கிஷன்கஞ்ச், தர்பங்கா, முசாபர்பூர், கோபால்கஞ்ச், கிழக்கு சம்பரன், மேற்கு சம்பரன், ககாடியா, சரண் மற்றும் சமஸ்திபூர் என 12 மாவட்டங்களில் உள்ள 102 தொகுதிகளை சேர்ந்த 901 பஞ்சாயத்துகளில் 38,47,531 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,09,511 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அதில் 19 நிவாரண முகாம்களில் 25,116 பேர் தஞ்சம் புகுந்தனர்.
ALSO READ | நாடு முழுவதிலும் உள்ள 9 மாநிலங்களில் வெள்ள பாதிப்பு... மத்திய அரசு கவலை..!!!
வெள்ளம் (Floods) காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்க 989 சமூக சமையலறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தர்பங்கா மாவட்டத்தில், 14 தொகுதிகளில் 173 பஞ்சாயத்துகளில் 13,51,200 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மொத்தம் 26 என்டிஆர்எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ALSO READ | பீகார் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு...!!