தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் நுழைவது உறுதி! வரும் 28 ஆம் தேதி பதவியேற்ப்பு விழா எனத்தகவல்
Nitish Kumar Joining NDA: மகா கூட்டணியில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் இணையலாம் எனத் தகவல்.
Bihar News: பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உடனான மோதலுக்கு மத்தியில், மீண்டும் பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார். இன்னும் 3 நாட்களுக்குள் பீகார் அரசியலில் மாற்றம் வரலாம். மகா கூட்டணியில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் இணையலாம். பீகார் அரசியலில் எந்த நேரத்திலும் பெரிய சம்பவம் நடக்கலாம்.
அதாவது நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜனவரி 28 ஆம் தேதி 9-வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். பாஜகவை சேர்ந்த சுஷில் மோடி துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல்.
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தனது அனைத்து எம்எல்ஏக்களையும் உடனடியாக பாட்னாவுக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தனது அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி பாட்னாவில் மகாராணா பிரதாப் பேரணி நடைபெற இருந்தது, அதுவும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - 2024 பொதுத்தேர்தலுக்கான வியூகம்! கையுடன் கைகோர்க்கும் எதிர்கட்சிகளும் விமர்சனங்களும்
டெல்லி பாஜக உயர் மட்டத்தில் ஆலோசனை
மறுபுறம் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் உயர் மட்டத்தில் தொடர் ஆலோசனை செய்து வருகின்றனர். அதோடு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பீகார் சட்டமன்றத் தொகுதிகள் விவரம்
பீகார் சட்டசபையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 122 ஆகும்
2020 பீகார் சட்டமன்ற தேர்தல் வெற்றி நிலவரம்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 2020 சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. லாலு யாதவின் கட்சிக்கு அடுத்தபடியாக பாஜக 74 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் நிதிஷ்குமாரின் ஜனதா தளம் ஐக்கிய 43 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
மேலும் படிக்க - ஹிந்தி கற்க வேண்டும் - கொந்தளித்த நிதிஷ்குமார்!
இவர்கள் தவிர, ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் வெற்றி பெற்றது. சிபிஐ(எம்எல்) 12 இடங்களில் வெற்றி பெற்றது.
அதே நேரத்தில், ஏஐஎம்ஐஎம் 5 இடங்களையும், இந்துஸ்தானி அவம் மோர்ச்சா 4 இடங்களையும், விகாஷீல் இன்சான் கட்சி 4 இடங்களையும், சிபிஐ 2, சிபிஎம் 2, சுயேச்சை ஒன்று, லோக் ஜனசக்தி கட்சி 1, பகுஜன் சமாஜ் கட்சி 1 இடங்களையும் கைப்பற்றினர்.
2022 இல் என்ன நடந்தது?
2020 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து நிதீஷ் குமார் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றாலும், 43 இடங்களில் வெற்றி பெற்ற ஜேடியு தலைவர் நிதிஷ் குமாரை முதல்வராக நியமித்தது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளில், பாஜக மற்றும் ஜேடியு இடையே பிளவு ஏற்பட்டது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகினார்.
மகா கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் முதல்வர் ஆனார் நிதிஷ் குமார். லாலு யாதவின் மகன் தேஜஸ்வி யாதவை துணை முதல்வராக்கினார்.
இந்நிலையில், பீகாரில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், பீகாரில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ