பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.


இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.


பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், இதுவரை 1¼ கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவாரண பொருட்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் போடப்பட்டு வருகிறது.


மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக பல்வேறு படைகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்டோர் 300 படகுகளுடன் சென்று தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுவரை 6¼ லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். 


இந்த நிலையில், மாநிலத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 202 ஆக உயர்ந்தது.