பீகார் வெள்ளம்: சுமார் 56 பலி, 69.81 பாதிப்பு!
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்தது.
மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், இதுவரை 56 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையால் பீகார் மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பீகார் அரசு தரப்பு, 'இந்தக் கன மழையால் இதுவரை 56 பேர் இறந்துள்ளனர்.
சுமார் 69.81 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மழையால் மாநிலத்தின் 13 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களில் 1.61 லட்சம் பேர் 343 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளது.