பத்திரிகையாளர் கொலை வழக்கு: ஆர்.ஜே.டி தலைவர் ஷாபுபூதின் மீது வழக்கு!
பீகார் பத்திரிகையாளரான ராஜதேவ் ரஞ்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி) தலைவர் முகம்மது ஷாபுபூதின் மீது சிபிஐ குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.
குற்றவியல் சதி மற்றும் கொலை தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் ஷாபுபூதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னும் சில குற்றவாளிகளும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர்.
மே 13, 2016 அன்று பத்திரிகையாளரான ராஜதேவ் ரஞ்சன், சியாணியில் வேலை முடிந்த வீட்டுக்கு திரும்பிவருகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக "பொய் கண்டறிதல்" சோதனைக்கு ஷாபுபூதின் உட்படுத்த காவல்துறை கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். மேலும் விசாரணையின் போது அவர் முரண்பாடான பதிப்புகளை அளித்தார்.
கடத்தல் மற்றும் கொலை உட்பட ஷாபுபூதின் மீது 39 குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளது, இவர் பிப்ரவரி 18 ம் தேதி தீஹார் சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.