பீகார் பள்ளி கல்வி தேர்வில் மாணவர்கள் முதலிடம் பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு மாநில முன்னாள் பள்ளி கல்வி தேர்வு வாரிய தலைவர் பிரசாத் சிங் மற்றும் அவருடைய மனைவி உஷா சிங்காவை கைது செய்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகாரில் மாநில பள்ளி தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் மாநிலம் முதலிடம் பிடித்த சாதனை மாணவர்களிடம் மீடியாக்கள் பேட்டி கண்டபோது அவர்களின் உண்மையான கல்வி திறன் என்னவென்பது வெளி உலகிற்கு தெரியவந்தது. மற்றும் பள்ளி கல்வித்துறை வாரியம் நடத்திய தேர்வில் முதலிடம் பெறுவதில் முறைகேடு நடைபெற்றதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதேபோன்று மாநில பல்கலைக்கழகங்களிலும் தேர்வில் ஒன்றுமே எழுதாத மாணவர்கள் கூட தேர்ச்சி அடைந்திருந்த சம்பவமும் வெளிவந்தது.


இதனையடுத்து இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்-மந்திரி நிதிஷ் குமார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார்


சிறப்பு புலனாவு குழு இம்முறைக்கேட்டில் முன்னாள் பீகார் மாநில பள்ளி கல்வித்துறை தேர்வுகள் வாரிய தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங், அவருடைய மனைவி முன்னாள் எம்.எல்.சி. மற்றும் கங்கா தேவி கல்லூரியின் முதல்வர் உஷா சிங்காவை கைது செய்து உள்ளனர். கடந்த வாரம் அவர்களுக்கு எதிராக பாட்னா கோர்ட்டு கைது வாரண்ட் பிறபித்தது. லால்கேஷ்வர் பிரசாத் சிங்கிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது, அவருக்கு தெரிந்தே முறைகேடுகள் நடைபெற்று உள்ளது என்று சிறப்பு புலனாய்வு பிரிவின் தலைவர் மனு மகாராஜ் கூறிஉள்ளார். கடந்த 11-ம் தேதி முறைக்கெட்டில் முக்கிய நபரான பாசா ராயை போலீசார் கைது செய்தனர். தொடரந்து விசாரணை நடைபெற்று வருகிறது.