பிகாரில் கைமூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் வயதான ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, அவர் சாலையில் கிடந்த சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இரண்டு மகளிர் போலீசார், கீழே இருந்த சைக்கிளை வேகமாக எடுக்கும்படி கூறி அந்த முதியவரை லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோவில், இரண்டு பிகார் மகளிர் போலீசார் இணைந்து பட்டப்பகலில், நடுரோட்டில் ஒரு முதியவரை ல்த்தியால் அனைவருக்கும் முன்னிலையில் அடிப்பது பதிவாகியுள்ளது. வலியால் துடிக்கும் அந்த முதியவர் தன்னை அடிக்க வேண்டாம் என கதறுவதும் அதில் பதிவாகியுள்ளது. அவர் அடியை தடுக்க முயன்றபோது, சில அடிகள கைகளிலும் விழுந்தது. 


மேலும் படிக்க | Dhirendra Shastri: சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாகேஷ்வர் தாமின் திரேந்திர சாஸ்திரி யார்?



இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகின. அதில், அந்த முதியவரின் பெயர் நவல் கிஷோர் பாண்டே என்றும், அவர் தனியார் பள்ளியில் சில குழந்தைகள் பாடம் எடுத்துவிட்டு வீட்டு திரும்பிக்கொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


பாபுவாவில் ஒரு பரபரப்பான சாலையில் அவரது சைக்கிள் சறுக்கி விழுந்தபோது, நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே, இரண்டு பெண் காவலர்கள் வந்து வாகனங்களின் ஹார்ன் சத்தத்திற்கு மத்தியில் சைக்கிளை எடுக்கச் சொன்னார்கள். இருப்பினும், அவர் தொடர்ந்து சைக்கிளை எடுக்க தடுமாறினார். 


டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவர் ஸ்வாதி மாலிவால், பிகாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை ட்வீட்டில் குறிப்பிட்டு,"காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வயதான ஆசிரியரின் சைக்கிள் இந்த அதிகாரிகள் முன் விழுந்தது, அவரது தவறா" என்றும் குறிப்பிட்டுள்ளார். 


அவர் அந்த ட்வீட்டில்,"இந்த போலீஸ்காரர்கள் ஒரு முதியவரை எப்படி இரக்கமின்றி தடியால் அடிக்கிறார்கள், பாபா பள்ளியில் ஆசிரியர். அவரது தவறு இந்த மேடம்கள் முன் அவரது சைக்கிள் விழுந்ததுதான் என்று கூறப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | மனைவிகளுடன் வாரத்தில் 3 நாட்கள்! 7வது நாளில் யாருடன்? - புது ஒப்பந்தம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ