கொரோனா தடுப்பூசி தயாரிப்பில், இந்தியா உலகை வழிநடத்துவதாக பாராட்டிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இதை நினைத்து தான் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பில் கேட்ஸ் (Bill Gates)  ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வர உலகம் தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பூசி உற்பத்தி திறன் ஆகியவற்றில் இந்தியா உலகை வழிநடத்துதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.



பில் கேட்ஸ் முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்தியாவைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
முன்னதாக பில் கேட்ஸ் மோடிக்கு ( PM Narendra Modi) எழுதிய கடிதத்தில், இந்திய அரசு டிஜிட்டல்  வழிமுறைகளை கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் முழுமையாகப் பயன்படுத்துவதை அறிந்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, ஆரோக்யா சேது டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கொரோனா பரவல் தடங்களை கண்டறிந்து சிறந்த முறையில், மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கியதற்காக  பாராட்டு தெரிவித்திருந்தார்.


கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) தயாரிப்பதில் இந்தியாவின் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, அதன் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸும் (edros Adhanom Ghebreyesus) ட்விட்டரில் தனது பாராட்டுக்களை பதிவிட்டுள்ளார்.



ALSO READ | CoWIN செயலியை இப்போது பதிவிறக்க வேண்டாம்; ஏன் தெரியுமா..!!!
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR