KeralaNunCase: பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு நிபந்தனை ஜாமின்!
கேரளா கன்னியாஸ்திரையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது!
கொச்சி: கேரளா கன்னியாஸ்திரையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது!
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மறை மாவட்ட பிஷபாக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். பஞ்சாபில் பணியாற்றுவதற்கு முன்னதாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இவர் பாதரியராக இருந்த போது கன்னியாஸ்திரியை ஒருவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டினை அடுத்து பிராங்கோ மூலக்கால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப் பொருப்பில் இருந்து விலகினார். எனினும் கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என மறுத்து வந்தார். தன் மீது தவறு ஏதும் இல்லை என வலியுறுத்தி வந்தார்.
பிராங்கோ முலக்கல் மீது தொடுக்கப்பட்ட புகாரினை கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை செய்து வந்தது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியைக்கு ஆதராவாக கேரளா மாநில மக்கள் களத்தில் இறங்கினர். இதனையடுத்து குற்றம்சாட்டம்பட்ட பேராயர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த மாதம் பிராங்கோ முலக்கல் தரப்பில் ஜாமின் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவினை கோட்டயம் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது, இந்நிலையில் தற்போது மீண்டும் பிராங்கோ முலக்கல் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கேரளா உயர்நீதிமன்றம் பிராங்கோ முலக்கல்-க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பிராங்கோ முலக்கல்-ன் கடவுசீட்டினை(Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!