மத்தியப் பிரதேசம் ஜபுவா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எங்கள் அரசாங்கம் இதுவரை 14 கோடி மக்களுக்கு கடனுதவி வழங்கியுள்ளது. இது கடன் எந்தவித உத்தரவாதமின்றி பிரதான மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சாதனையை தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் நான்கு ஆண்டுகளில் செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளில் இதை செய்ய முடியவில்லை.


மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்த நேரத்தில் மத்திய பிரதேசத்தின் நிலை என்ன? என்பதை நினைவில் கொள்ளுங்கள், மாநிலத்தை பற்றியோ, மக்களின் நலத்திட்டத்தை பற்றி ஒருபோதும் காங்கிரஸ் சிந்திப்பதில்லை என்று பிரதமர் மோடி கூறினார். 


55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 1,500 பள்ளிகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு 15 ஆண்டுகளாக ஆட்சியில் 4,000 பள்ளிகள் கட்டப்பட்டு உள்ளன. 


 



எங்களின் மந்திரம் "சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி, இளைஞர்களுக்கான வருமானம், விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன வசதி, முதியவர்களுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும்" என்பதே. 


கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் கூறி வருகிறது. ஆனால் மறுபுறம் அவர்களை மிரட்டி சிறைக்கு அனுப்புகிறது. 


எங்களின் லட்சியம்...... 


> 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குபது.


> "அனைவருக்கும் வீடு" 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைவருக்கும் சொந்தமாக வீடுகள் வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம். தற்போது வரை 1.25 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கியுள்ளோம்" 


இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.