பாஜக எம்பிக்கள், அமைச்சர்கள் மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர்மோடி வலியுறுத்தல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவைச் அவைகயில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக எம்.பிக்கள், அவைக் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் பயிற்சி அளிக்க பாஜக தலைமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நேற்று தொடங்கியது. 


இந்த பயிற்சி முகாமில் உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி உள்பட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, பாஜக எம்பிக்களுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகளை வலியுறுத்தினார். 


இதுகுறித்து அவர் பேசுகையில்; பாஜக தானாக வளர்ந்து வந்த மரத்தைப் போன்றது அசம்பிள் செய்யப்பட்ட கட்சியல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொள்கையாலும் சிந்தனையாலும்தான் பாஜக இத்தனை பெரிய வெற்றியை பெற்று இன்று மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக வளர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி ஒரு தனிப்பட்ட குடும்ப வாரிசு அரசியலால் இக்கட்சி வளரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


பாஜகவைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராகவோ எம்பியாகவோ மாறினாலும் அடிப்படையில் அவர் தொண்டர்தான் என்று மறந்துவிடக்கூடாது என்றும் மோடி அறிவுறுத்தியுள்ளார். எத்தனை வயதானாலும் நாம் மக்களிடமிருந்து கற்கத் தயாராக இருக்கும் மாணவர்களைப் போல் இருக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.