இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு நிதிக் குற்றமும் காந்தி குடும்பத்துடன் "ஆழமான தொடர்புகளை" கொண்டுள்ளது என்று பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார். இவரது கருத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக மால்வியா ட்வீட் செய்ததாவது, "இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு நிதிக் குற்றமும் காந்தி குடும்பத்துடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. மல்லையா சோனியா காந்திக்கு விமான மேம்படுத்தல் டிக்கெட்டுகளை அனுப்புவார். MMS (மன்மோகன் சிங்) மற்றும் PC (பி சிதம்பரம்) ஆகியோருடன் அனுகள் கொண்டிருந்தார். ஆனால் தற்போது தலைமறைவாக உள்ளார். நீரவ் மோடியின் திருமண நகை கடையினை ராகுல்காந்தி தான் முன்னின்று திறந்துவைத்தார். ராணா, பிரியங்கா வாத்ராவின் ஓவியங்களை வாங்கினார்." என விமர்சித்துள்ளார்.


இந்நிலையில் மால்வியாவின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக களமிறங்கிய காங்கிரஸ்., " 2014-ஆம் ஆண்டிலிருந்து YES வங்கியின் கடன் புத்தகம் பன்மடங்கு வளர்ந்ததால் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் இருவரும் YES வங்கியினை சரிவுக்கு "உடந்தையாக" இருந்ததாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் ஆளும் கட்சியைத் தாக்கியது.



மால்வியாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ், பிரியங்கா காந்தி வாத்ரா, MF ஹுசைனின் ஒரு ஓவியத்தை அவமானப்படுத்திய YES வங்கி நிறுவனர் கபூருக்கு ரூ.2 கோடிக்கு விற்றதாகவும், 2010-ஆம் ஆண்டின் வருமான வரி அறிக்கையில் முழுத் தொகையையும் அவர் வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.


காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி பாஜகவை அவதூறாக பேசியது, இது அரசாங்கத்தின் "திசைதிருப்பல்" தந்திரமாகும். YES வங்கியின் கடன் புத்தகம் 2014 மார்ச் மாதத்தில் ரூ.55,633 கோடியிலிருந்து 2019 மார்ச் மாதத்தில் ரூ.2,41,499 கோடியாக உயர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


"பணமதிப்பிழப்புக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளில் கடன் புத்தகம் 100 சதவீதம் உயர்ந்துள்ளது, அதாவது 2016 மார்ச் மாதத்தில் ரூ.98,210 கோடியிலிருந்து 2018 மார்ச் மாதத்தில் ரூ.2,03,534 ஆக உயர்ந்தது? பிரதமர் மற்றும் MF தூக்கமா, அறியாமையா அல்லது உடந்தையாக இருந்தார்களா?" அவர் கேட்டார்.


62 வயதான கபூரை மும்பை அமலாக்க இயக்குநரகம் ஞாயிற்றுக்கிழமை பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து, மேலும் மார்ச்-11 ஆம் தேதி வரை நீதிமன்றத்தால் ED காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.